spot_img
HomeNewsநடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை

பாரம்பரிய மிக்க முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும்  விற்பனை செய்து ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வரும்  ‘துகில்’ எனும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னை- அடையாறில்  தொடங்கப்பட்டிருக்கிறது.  இதனை முன்னணி நட்சத்திர  நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்ததுடன்  முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

‘துகில்’- அருகி வரும் கைத்தறி ஆடைகளின் மரபை மீட்கும் முயற்சியில் தொழிலதிபர்கள் வர்ஷா மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் சீரிய முயற்சியில் 2022 ஆம் ஆண்டில் இந்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தின் அனைத்து தமிழர்களுக்கும் தங்களின் பாரம்பரிய உடையான காஞ்சி பட்டு சேலை, தூய பருத்திச் சேலை, கூறைநாடு சில்க் காட்டன் சேலை, பட்டு வேட்டி போன்ற கலாச்சார உடைகளை பிரத்யேக முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கி, கைத்தறி ஆடைகளின் விற்பனையில் புதிய தடத்தை பதித்து வருகிறது.

‘ துகில்’ நிறுவனத்தின் சிறப்பு அம்சமாக வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் – வடிவமைப்பு – ஆகியவற்றை தேர்வு செய்தாலும்.. அதனையும் அவர்கள் வியக்க வைக்கும் அளவில் நேர்த்தியாகவும் பாரம்பரியத்துடனும் பட்டு சேலைகள்- பருத்தி சேலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் புதிய கிளை மங்கலம் பொருந்திய நன்னாளாம்  அட்சய திருதியை நாளான ஏப்ரல் 30 ஆம் தேதியன்று  சென்னை அடையாறில் உள்ள சாஸ்திரி நகரில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனையில் ஈடுபட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img