சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, தயாரிப்பாளர் கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 போகி என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் அதிரடி அறிவிப்பு வீடியோ வெளியாகிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.
பிரபல நட்சத்திர நடிகர் ஷர்வா மற்றும் ஹிட் இயக்குநர் சம்பத் நந்தி இருவரும், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் KK ராதாமோகன் தயாரிக்க, லக்ஷ்மி ராதாமோகன் வழங்கும், மிக முக்கியமான பான் இந்தியா திரைப்படமான, “போகி” — #Sharwa38இல் முதல் முறையாக இணைந்துள்ளனர். 1960 களின் பரபரப்பான பின்னணியில் அதிரடி ஆக்சனுடன், விறுவிறுப்பும் உணர்ச்சியும் நிரம்பிய ஓர் புதிய அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. ஃபர்ஸ்ட் ஸ்பார்க் எனப் பெயரிட்டப்பட்ட அசத்தல் அறிமுக வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஃபர்ஸ்ட் ஸ்பார்க் வீடியோ, 1960களின் வட தெலுங்கானா – மகாராஷ்டிரா பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தக்கதையின் மையத்தை மிக வித்தியாசமாக விவரிக்கிறது. இயக்குநர் சம்பத் நந்தி வித்தியாசமான முறையில் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளார். ஷர்வா இதுவரை இல்லாத மிரட்டலான தோற்றத்தில், காட்சியளிக்கிறார்.
பழையதை எரித்து புதியதை துவங்கியது தீயின் எழுச்சியை குறிக்கும் தீபாவளி நன்நாளான போகியின் உணர்வுகளை இந்த வீடியோ வழங்குகிறது.
இன்று ஹைதராபாத்தில் கிரண் குமார் மன்னே கலை இயக்கத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட பிரமாண்ட செட்டில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த பிரமாண்டமான செட்டை 6 மாதங்கள் உழைத்து, தயாரிப்பு குழு உருவாக்கியுள்ளது.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாத்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகும் போகி, இந்திய திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள்:
சார்மிங் ஸ்டார் ஷர்வா, அனுபமா பரமேஸ்வரன், டிம்பிள் ஹயாத்தி
தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர், இயக்கம் : சம்பத் நந்தி தயாரிப்பாளர்: கே.கே.ராதாமோகன்
பேனர்: ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ்
வழங்குபவர்: லட்சுமி ராதாமோகன்
கலை இயக்குனர்: கிரண் குமார் மன்னே
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் S2 Media