சூர்யா, பூஜாஹெக்டே, பிரகாஷ் ராஜ் ஜோஜூ ஜார்ஜ், நாசர், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரெட்ரோ. என்ன சொல்ல வருகிறது படம் ?
அனாதையான சூர்யாவை ஜோஜூ ஜார்ஜின் மனைவி தன் பிள்ளையைப் போல் எடுத்து வளர்க்க, ஆனால் சூர்யாவை தன் பிள்ளையாக ஏற்றுக்கொள்ள ஜோஜு ஜார்ஜ் மறுக்கிறார். இந்த நிலையில், அவரின் மனைவி இறந்துவிட ஒரு கட்டத்தில் ஜோஜூ ஜார்ஜூவின் உயிரை காப்பாற்ற, அன்று முதல் சூர்யாவை தன் உயிரை காக்கும் இரும்பு மனிதனாக மற்றும் தன் நிழல் உலக வேலைகளுக்கு பயன்படுத்த, ஒரு கட்டத்தில் பூஜா ஹெக்டாவை காதலிக்கும் சூர்யா தன் காதலுக்காக தன் சட்ட விரோத செயல்களை நிறுத்துகிறார்..
அதனால் பூஜா ஹெக்டேவை ஜோஜூ ஜார்ஜ கொலை செய்ய முயற்சிக்க அவரின் கையை வெட்டி விடுகிறார் சூர்யா. இதனால் ஜெயிலுக்கு போகும் சூர்யாவை பிரிந்து நாயகி அந்தமான் செல்ல, அவரைத் தேடி சூர்யாவும் செல்ல அங்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன ? பாருங்கள்.
ரெட்ரோ சூர்யாவுக்கு அடிதடி வேடம். தன் ரசிகரை திருப்திப்படுத்த படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள். சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த ரெட்ரோ ஒரு பெரிய வெற்றி கொண்டாட்டம். அதேபோல் சூர்யாவின் சண்டைக் காட்சிகளின் வேகம் ஒரு 18 வயது வாலிபனை போல் உள்ளது. எந்த ஒரு இடத்திலும் சூர்யாவுக்கு சிரிப்பு வராது. அவர் சிரிக்க வேண்டும் என்று அவர் தாயும் அவர் காதலியும் ஆசைப்பட, அந்த ஆசை நிறைவேறியதா என்பதை அந்தமான் காட்சிகள் நமக்கு சொல்கிறது.
அந்தமானில் அடிமைகளாக வாழும் மக்களை நாசரும் அவர் மகன் இருவரும் களத்தில் சண்டை போட செய்து அதில் பலவீனமானவனை கொலை செய்து முதலைக்கு இறையாக்குவது என ஒரு பிரிட்டிஷ் அடிமைத்தனத்தை நம் முன் கொண்டு வந்து காட்டி இருக்கிறார்கள். களத்தில் சூர்யா சண்டையிடும் காட்சிகள் தியேட்டரில் விசில் பறக்கிறது.
காதலுக்காக ஏங்கும் சூர்யா, காதலியை பார்த்து காதலை ஏற்க சொல்ல அதற்காக அவர் செய்யும் செயல்கள் ரசிகனை ரசிக்க வைக்கிறது, பூஜா ஹெக்டே கவர்ச்சி கன்னியாக பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்த படத்தில் அழகு பதுமையாக வலம் வருகிறார். காதலிக்கும் சூர்யாவை சிரிக்க சொல்லி பார்க்கும் அவரின் ஆவல், முதன் முதலாக பைக்கில் பின்புறம் இருந்து கொண்டு சூர்யா சிரிப்பதை பைக் கண்ணாடியில் பார்க்கும் அழகும் அதற்கான அவரின் பூரிப்பும் நடிப்பில் நான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.
படத்திற்கு ஒரு ஜோக்கர் வேண்டும் அந்த ஜோக்கர் வேடத்தை ஏற்றிருக்கிறார் ஜெயராம். சிரிப்பு டாக்டர் மக்களை சிரிக்க வைக்க அவர் செய்யும் வேலைகள் ஜெயராமுக்குரிய தனி சிறப்பு. மத்திய மந்திரியாக பிரகாஷ் ராஜ். சூர்யாவிடம் இருக்கும் தங்க மீனை மீட்க போராடும் அரசியல்வாதி. அந்தத் தங்கமீன் என்ன என்பது படம் பார்க்கும் ரசிகன் இறுதிக் காட்சியில் தெரிந்து கொள்ளலாம்.
ஒளிப்பதிவாளரை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். பிரம்மாண்டத்தை மிக பிரம்மாண்டமாக காட்டி இருக்கிறார். படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். மக்களை சந்தோஷப்படுத்துவதில் இவருக்கு இணை இவரே. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரின் ஸ்டைலில் அவர் பாணியில் சிறப்பாக, திரைக்கதையில் எந்தவித தொய்வும் இல்லாமல் மிக நேர்த்தியாக இயக்கியிருக்கிறார்.
ரெட்ரோ -அடிமைச்சங்கிலியை உடைத்து எரியும் ஆண்மகன்
Focusone cinema
A K hussain
8939689281