spot_img
HomeNewsபெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி!

பெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி!

 

முதலாவது தென்னிந்திய டென்பின் பவுலிங் போட்டி தொடர் (1st South Zone Tenpin Bowling Tournament) கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அமோபாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் 2வது நிலை வீரரான கர்நாடாகை சேர்ந்த கிஷான்.ஆர், டாப் வீரர் தெலுங்கானாவை சேர்ந்த விவேக் சிங்குடன் மோதினார். இரண்டு கேம்களில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய கிஷான்.ஆர், (கேம் ஒன் 179) பின்களோடு, 159 பின்கள் எடுத்த விவேக்கை விட 20-பின்கள் முன்னிலை பெற்றார்.

மேலும், 2வது கேமில், விவேக் 189 பின்களும், கிஷான் 174 பின்களும் ஸ்கோர் செய்த நிலையில், ஒட்டுமொத்தமாக 353-348 என்ற பின்களோடு, 5 பின்கள் வித்தியாசத்தில் விவேக்கை வீழ்த்தி கிஷான்.ஆர் சாம்பியன் பட்டம் வென்றார்.

முன்னதாக ஆண்கள் பிரிவில் நடைபெற்ற ஸ்டெப்லேடர் முதலாவது சுற்றில், 5வது நிலை வீரரான கர்நாடாகாவை சேர்ந்த பர்வேஸ் அகமது, (364), 3வது நிலை வீரரான தெலுங்கானாவை சேர்ந்த லலித்குமார் (327) மற்றும் கர்நாடாகவை சேர்ந்த ஈஸ்வர்ராவ் (324) ஆகியோரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

2வது நிலை வீரரான தெலுங்கானாவை சேர்ந்த நவீன் சித்தம் ((395) 6 வது நிலை வீரரான கர்நாடாகாவின் விஜய் பஞ்சாபி (303) மற்றும் 8 வது நிலை வீரரான ஆந்திரப் பிரதேசின் அப்துல் முசீப் (365) ஆகியோரை வீழ்த்தி அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறினார்.

3வது நிலை வீரரான கிஷன் ஆர் (394) 4வது நிலை வீரரான நவீன் சித்தம் (340) மற்றும் 5 வது நிலை வீரரான பர்வேஸ் அகமது (366) ஆகியோரை வீழ்த்தி, முதல் நிலை வீரரான விவேக் சிங் ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், தமிழக வீராங்கனை சனா சலீம் ( கேம் ஒன் 172) 5 பின்கள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்தார். அவர் கர்நாடக வீராங்கனை ஹிட்டாஷா சிசோடியா (167) மற்றும் மற்றொரு தமிழக வீராங்கனை சபீனா அதிகா (167) ஆகியோரை வீழ்த்தினார்.

ஹிட்டாஷா தொடர்ச்சியாக நான்கு ஸ்ட்ரைக்குகளை பெற்றார். பின்னர் 199 ஸ்கோர் செய்தார். சபீனா மிகுந்து போராடியும் 185 மட்டுமே ஸ்கோர் செய்தார். சனா சலீம் 147 பின்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து 14 பின்கள் வித்தியாசத்தில் ஹிட்டாஷா (366-352-319) முதல்இடத்தை பிடித்தார்.

சிறப்பு பரிசுகள்:

6 விளையாட்டு போட்டிகளில் அதிகபட்ச சராசரி (ஆண்கள் ): விவேக் சிங் (தெலுங்கானா) (196.7)

18 விளையாட்டு போட்டிகளில் அதிகபட்ச சராசரி (ஆண்கள் ): விவேக் சிங் (தெலுங்கானா) (189.1)

12 விளையாட்டு போட்டிகளில் அதிகபட்ச சராசரி (பெண்கள்) : ஹிட்டாஷா சிசோடியா (கர்நாடகா) (167.4)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img