spot_img
HomeCinema Reviewஹிட் ; 'தி தேர்ட் கேஸ்'- விமர்சனம்

ஹிட் ; ‘தி தேர்ட் கேஸ்’- விமர்சனம்

 

நானி ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும்  பலர்  நடிப்பில்  வெளி  வந்து  இருக்ககும்  படம்  ஹிட் – 3. படம் என்ன சொல்ல  வருகிறது ?

போலிஸ் ஆபிசர்  நானி  மனிதனை  தலைகீழாக தொங்கவிட்டு பின் தலையை அறுத்து தலையில் உள்ள சில பாகங்களை  எடுக்கிறார் எதற்கு?

இதேபோல்  பல  மாநிலங்களில்  சில பேர்  இதேபோல் சிலரை  இதுபோல்  கொலை செய்கின்றனர்.

எதற்கு  இதுபோல்  கொலைகள்  நடக்கின்றன ?  ஒரு போலிஸ் அதிகாரியே  இதுபோல்  கொலை செய்கிறாரே எதனால் என்பதை அறிந்து  கொள்ள  பாருங்கள் ஹிட் – 3

ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாகங்கள் தெலுங்கில் வெளியாகி அவை வித்தியாசமான விறுவிறுப்பான புலனாய்வு திரைப்படமாக திகழ்ந்து இரசிகர்களை மகிழ்வித்தது. அதனால் அதே பரபரப்பும் விறுவிறுப்பும் நட்சத்திர நடிகரான நானியும் உடன் இணைந்திருப்பதால்.. இரண்டு மடங்கு எதிர்பார்ப்பு எகிறியது.

ஆனால் இரண்டு பாகத்தை விட மூன்றாம் பாகத்தில் கதைக்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு.. கதையின் நாயக பிம்பத்திற்கு அதிகமான முன்னுரிமை வழங்கப்பட்டதால் படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது.

இரண்டாம் பாதியில் ஆர்வத்துடன் இருக்கும் இரசிகர்களுக்கு ‘ஸ்குவிட் கேம்’ எனும் கொரிய தொலைக்காட்சி தொடரின் பாதிப்பில் உருவான கதையாக இருப்பதைக் கண்டு அதையும் நேர்த்தியாக சொல்லாததால் எரிச்சல் மேலும் கூடுகிறது. இருந்தாலும் நானி என்ற ஒற்றை காந்தம் இரசிகர்களை இருக்கையில் அமர வைக்கிறது.

நானி அதிரடி எக்சன் காட்சிகளில் பரபரப்பும் விறுவிறுப்பும் காண்பித்து இரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். அதிலும் உச்சகட்ட சண்டைக் காட்சியில் அவர் இரத்தம் தெறிக்க தெறிக்க அடிப்பது தான் பயமாக இருக்கிறது.

நானியின் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி திரையில் தோன்றும் குறைந்த நேரத்திலும் தன் அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி தமிழ் இரசிகர்களின் மனதை கவர்கிறார்.

நானியின் ஜோடியாக நடித்திருக்கும் ராசியான நடிகையான ஸ்ரீநிதி ஷெட்டி- தொலைத்த இளமையுடன் அழகாக இருக்கிறார். அதிரடியில் கலக்கி இருக்கிறார். பாடல் காட்சியில் கவர்ச்சியாக தோன்றுகிறார்.

சமூக வலைதளங்களின் இருட்டு உலகத்தையும், அதில் நடைபெறும் குற்ற சம்பவங்களையும் இயக்குநர் விவரித்து இருப்பது வியப்பாக இருந்தாலும், அதனை வலிமையான கமர்சியல் அம்சங்களுடன் சொல்லியிருந்தால் அனைத்து தரப்பு இரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img