spot_img
HomeNewsAR ரஹ்மான்-பிரபுதேவா கூட்டணியில்  தயாராகும் ‘மூன்வாக்’ உலகளவில் வெளியிடும் ரோமியோ பிக்சர்ஸ் 

AR ரஹ்மான்-பிரபுதேவா கூட்டணியில்  தயாராகும் ‘மூன்வாக்’ உலகளவில் வெளியிடும் ரோமியோ பிக்சர்ஸ் 

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் பெருமையாக அறிவிக்கிறது — பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மற்றும் ஆஸ்கார் நாயகன் AR ரஹ்மான் 25 வருடங்கள் கழித்து ஒன்றிணைகிறார்கள்.

இப்படத்தை இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மனோஜ் NS இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் அறிவிப்பிலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மூன்வாக் – இசை, நடனம், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு அனைத்து வயதினரையும் மகிழ்விக்கும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பான் இந்திய ரீதியில் வெளியாகும் இந்தப் படம் தற்போது படப்பிடிப்பும், எடிட்டிங்கும் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.

விஜய் நடித்த G.O.A.T மற்றும் அஜித் குமார் நடித்த Good Bad Ugly போன்ற திரைப்படங்களை வெற்றிகரமாக சமீபத்தில் வெளியிட்டது ரோமியோ பிக்சர்ஸ்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில் – “25 ஆண்டுகளுக்குப் பிறகு AR ரஹ்மானும், பிரபுதேவாவும் ஒன்றாக இணையும் மூன்வாக் போன்ற சிறப்பான திரைப்படத்தை வெளியிடுவதில் பெருமையாக உள்ளது. இயக்குநர் மனோஜ் என்.எஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ்-இன் முதல் திரைப்படமே அதிக பொருட்செலவில், குடும்பம் முழுவதையும் மகிழ்விக்கும், இசை, நடனம் மற்றும் நகைச்சுவையால் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது” என்றார்.

படத்திற்கு ஒளிப்பதிவு: அனூப் V ஷைலஜா, எடிட்டிங்: ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, நடனம்: சேகர் VJ, பியூஷ் ஷாஷியா, புரொடக்‌ஷன் டிசைன்: ஷனூ முரளிதரன், ஆடையமைப்பு: திவ்யா ஜார்ஜ் மற்றும் சுவேதா ராஜு சிறப்பாக பங்களித்துள்ளார்கள். திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் இயக்குநர் மனோஜ் NS உடன் சேர்ந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.

மூன்வாக் உலகம் முழுவதும் இசை, நடனம் மற்றும் நகைச்சுவையுடன் திரையரங்குகளில் விழாவாக ரசிகர்களை மெய்மறக்கச் செய்ய தயாராக உள்ளது.

Photo (இடது முதல் வலது): கிருஷ்ண குமார் Y (லைன் புரொட்யூசர், பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்), ரமிஸ் ராஜா (எக்ஸிகியூட்டிவ் டைரக்டர், பிஹைண்ட்வுட்ஸ்), மனோஜ் NS (நிறுவனர் மற்றும் சிஇஒ, பிஹைண்ட்வுட்ஸ்), நடிகர் பிரபுதேவா மற்றும் ராகுல் (ரோமியோ பிக்சர்ஸ்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img