spot_img
HomeNewsதமிழ் மற்றும் மலையாளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் 'நரிவேட்டை'!

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘நரிவேட்டை’!

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது; தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் மற்றும் ஃப்யூச்சர் ரன்அப்  ஃபிலிம்ஸ் இணைந்து பிரமாண்டமான முறையில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள்.

உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் வருகிற மே 23-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அனுராஜ் மனோகர் இயக்கத்தில், ‘சாகித்ய அகாடமி விருது’ பெற்ற  அபின் ஜோசப் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அழுத்தமான கதை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான கதைசொல்லலுடன் தரமான நடிப்பை வழங்கும் கலைஞர்களுடன் சிறப்பான அனுபவத்தை வழங்கவுள்ளது.

‘நரிவேட்டை’ திரைப்படத்தில் டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சராமூடு, முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகமாகும் இயக்குனர் சேரன் ஆகியோருடன் பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம் ஆகியோர் துணை கதாபாத்திரத்திரங்களில் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பான கதையம்சத்தை கொண்ட இத்திரைப்படத்தை இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷா, ஷியாஸ் ஹாசன் தயாரித்துள்ளனர். 132 நிமிடம் ஓடக்கூடிய நரிவேட்டை திரைப்படம் அதன் சுருக்கமான படத்தொகுப்பு, இதமான ஒளிப்பதிவு மற்றும் அதிரடியான ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையில் ரசிகர்களை கவர்ந்திழுக்க தயாராக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img