சூரி, ஐஸ்வர்ய லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், பாலா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மாமன். படம் என்ன சொல்ல வருகிறது ?
சூரியின் சகோதரி சுவாசிகாவிற்கு குழந்தை இல்லாத காரணத்தால் மனம் ஒடிந்த நிலையில் இருக்கும்போது அவர் கர்ப்பம் தரிக்கிறார் அவரது சந்தோஷத்தை விட அவரின் சகோதரர் சூரிக்கு மிக அதிக சந்தோஷம். குழந்தை பிறந்தவுடன் அதை கையில் சுமக்கும் சூரி அன்று முதல் தனது சகோதரியின் மகனை எந்த நிலையில் பிரியாமல் இருக்க, இந்த தருணத்தில் சுவாசிகாவிற்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஐஸ்வர்ய லட்சுமிக்கும் சூரிக்கும் காதல் ஏற்பட, காதல் கல்யாணத்தில் முடிய, முதலிரவில் சூரியின் அக்கா மகன் உடன் இருக்க பிரச்சனை ஏற்படுகிறது. பிரச்சனைக்கு தீர்வு என்ன ? பாருங்கள் மாமன்..
ஒரு சிறந்த குடும்பப் பின்னணியில் தமிழ் திரைப்படம் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது. அதை போக்கும் வண்ணமாக வந்திருக்கிறது மாமன். காமெடி நாயகனாக இருந்த சூரி கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்து ஒரு சிறந்த நாயகனாக வலம் வரும் இந்த நேரத்தில், அவருக்கு, அவர் நடிப்புக்கு தீனி போடும் வகையில் ஒரு சிறந்த திரைப்படம் தான் மாமன்/ நகைச்சுவையில் சூரி நிறைய சாதித்து இருந்தாலும் நாயகனாக தன் அத்தியாயத்தை ஆரம்பித்தாலும். உடன் சில பிரபலமான கதாநாயகர்கள் அந்த படத்தில் இருந்தார்கள்.
ஆனால் இந்த மாமன் படத்தை முழுவதுமாக சுமக்கிறார் சூரி . ஒரு நகைச்சுவை நாயகனால் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என பல நகைச்சுவை நாயகர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சூரியும் இந்தப்படத்தில் தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். தன் சகோதரியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்கும் பொழுது கண்கள் பணிக்கின்றன. அதேபோல் அந்தக் காட்சியை பார்க்கும் நமக்கும் ஏதோ ஒரு உணர்வு நம்மை தாக்குகிறது.
தாய்மாமன் என்றால் சாதாரண உறவு அல்ல.. தாய்க்குப்பின் தாய் மாமன் தான் என்பது உலகறிந்த விஷயம். அதே சமயத்தில் தன் திருமணத்திற்கு பிறகு தன் மனைவியை காதல் ஏக்கத்தை தன் சகோதரியின் மகனால் தடைபடும்போது மனைவியா? மருமகனா ? என்று வரும்போது மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் பரிதவிக்கும் இடத்திலும் சரி, சூரி ஒரு பண்பட்ட கலைஞனைப் போல் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரைப் பற்றி இந்த படத்தில் நடித்திருப்பதைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே இருக்கலாம்👌👌
நாயகி ஐஸ்வர்யா லட்சுமி டாக்டராக வரும்போதும் சரி, சூரியை காதலிக்கும் போதும் சரி, சூரியின் சகோதரி மகனால் தன் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும்போதும் சரி, ஒரு சராசரி பெண்ணுக்குரிய குணங்களுடன் இருப்பது போல் நமக்கு தெரிந்தாலும் அதற்குள் அவரின் மனது, எண்ணங்களை தன் கண்களால் பிரதிபலிக்கும்போது நமக்கு ஒரு பரிதாபம் ஏற்படுகிறது,
சுவாசிகா லப்பர் பந்து படத்திற்குப் பிறகு இவருக்கு அமைந்திருக்கும் சிறந்த கதாபாத்திரம். கதாநாயகிகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு தன் நடிப்பை மெருகேற்றி இருக்கிறார். குழந்தை இல்லை என்ற ஏக்கத்திலும் குழந்தை கருவாக தன் வயிற்றில் இருப்பது அறிந்து அவர் வெளிப்படுத்திய முக பாவங்கள் இந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு எதிர்பார்க்கலாம்.
குட்டிப்பையன் தன் சுட்டித்தனத்தால் ரசிகனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறார் இவருக்கும் எதிர்காலம் தமிழ் திரை உலகில் சிறப்பாக இருக்கிறது என்பதில் நமக்கு ஐயமில்லை. மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். உறவுகளின் சங்கமங்களை உணர்ச்சிமயமாக நமக்குத் தெரியப்படுத்தி இருக்கும். இல்லை இல்லை நமக்கு உணர்த்தியிருக்கும் இயக்குனருக்கு நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாமன் – -தாய்-மாமன்