கதை சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை தமிழ் சினிமா எப்போதும் ரெட் கார்பெட் கொண்டுதான் வரவேற்கும். அவர்களை பெரிய நட்சத்திரமாகவும் அங்கீகரிக்கும். பல தலைமுறைகள் தாண்டியும் இது தொடர்ந்து வருகிறது. ‘மைனா’ உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சேது தற்போது ‘மையல்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் மே 23 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதுகுறித்து நடிகர் சேது பகிர்ந்து கொண்டதாவது, “என்னுடைய சினிமா கரியர் மற்றும் தனிப்பட்ட வாழ்வை மாற்றிய படம் ‘மையல்’. என்னுடைய முழு திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கும் கதாபாத்திரத்திற்காக பல வருடங்களாக நான் காத்திருந்திருக்கிறேன். அது ‘மையல்’ படத்தில் நடந்திருக்கிறது. இந்த வாய்ப்பிற்காக அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி, ஆர். வேணுகோபால் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுக்கும் இதுபோன்ற தயாரிப்பாளர்களால்தான் தமிழ் சினிமாவுக்கு பெருமை. தமிழ் இலக்கியத்தில் முத்திரை பதித்திருக்கும் ஜெயமோகன் சாரின் கதையின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே பார்க்கிறேன். இயக்குநர் APG ஏழுமலை கதையை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் படமாக்கி இருக்கிறார். நிச்சயம் அனைவரும் விரும்பப்படும் படமாக இது இருக்கும் என நம்புகிறேன்”.
‘மையல்’ படத்தில் சேது கதாநாயகனாகவும் சம்ரிதி தாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா மற்றும் சி.எம். பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு: ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி,
தயாரிப்பாளர்கள்: அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஆர். வேணுகோபால்,
கதை, திரைக்கதை மற்றும் வசனம்: எழுத்தாளர் ஜெயமோகன்,
இயக்கம்: APG ஏழுமலை,
இசை: அமர்கீத்.எஸ்,
ஒளிப்பதிவு: பால பழனியப்பன்,
படத்தொகுப்பு: வெற்றி சண்முகம்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்.
தொடர்பு:
Media Contact: D’one
Point of contact : Abdul.A.Nassar
Email ID: [email protected]
Ph. No: 99418 87877