spot_img
HomeNews'வேல்ஸ்' இல்ல புதுமண ஜோடிக்கு  கிருஷ்ணர் சிலைகளை திருமண பரிசளித்த சினிமா பத்திரிகையாளர் சங்கம்

‘வேல்ஸ்’ இல்ல புதுமண ஜோடிக்கு  கிருஷ்ணர் சிலைகளை திருமண பரிசளித்த சினிமா பத்திரிகையாளர் சங்கம்

சமீபமாக வெகு விமரிசையாக நடைபெற்ற வேல்ஸ் பல்கலை கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷின் மகள் செல்வி. ப்ரீத்தா – செல்வன் லஷ்வின் திருமண விழாவினை உலகம் முழுமைக்கும் பெரும் செய்தியாக கொண்டு சேர்த்த செய்தி ஊடக , சமூக வலைதள பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி நவிழ விரும்பிய வேல்ஸ் பல்கலை கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் அதற்காக ஒரு சிறப்பு ஏற்பாட்டினை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் செய்திருந்தார்.

அங்கு விழா மேடையில் மணமக்களுக்கு 71-ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் திருமண பரிசாக ராதே கிருஷ்ணர் சிலையை தலைவர் D.R. பாலேஷ்வர் , செயலாளர் R.S. கார்த்திகேயன், பொருளாளர் A.மரிய சேவியர் , துணைத் தலைவர் கலைமாமணி மணவை பொன் மாணிக்கம் , இணை செயலாளர்கள் ‘மதிஒளி’ குமார் & J.சுகுமார் செயற்குழு உறுப்பினர்கள் ‘மதிஒளி’ ராஜா , குறள் டி.வி.மோகன் , உறுப்பினர்கள் ‘மைசிக்ஸர்’ விஜய் ஆனந்த் , மூவி விங்ஸ் தர்மராஜ் உள்ளிட்டோர்.

71 – ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ சார்பில் ராதே கிருஷ்ணர் சிலை மணமக்களுக்கு திருமண பரிசாக வழங்கப்பட்டதென்றால் அதன் தொடர்சியாக சங்க உறுப்பினர் ‘மைசிக்ஸர்’ விஜய் ஆனந்த் , தவழும் கிருஷ்ணர் சிலையை தனது சார்பில் திருமண பரிசாக யதேச்சையாக வழங்கியது ., வேல்ஸ் பல்கலை வேந்தரின் புருவங்களை உயர செய்தது.

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்று தமிழில் ஓர் அருமையான சினிமா பாடல் உண்டு. விரைந்து இந்த பல்கலை கழக குடும்பத்தின் வாரிசுகளுக்கு கிருஷ்ணர் புண்ணியத்தில் மேலும் , பெரும் குடும்பம் அமைய வாழ்த்திவிட்டு வந்தது 71 ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img