spot_img
HomeNews'ராமாயணா' படத்தில் ரன்பீர் கபூர் - யாஷ் திரையில் இணைந்து தோன்றும் நேரம் குறைவாக இருக்கும்....

‘ராமாயணா’ படத்தில் ரன்பீர் கபூர் – யாஷ் திரையில் இணைந்து தோன்றும் நேரம் குறைவாக இருக்கும். அது ஏன்?

தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் ஆதரவுடன் தயாராகும் ‘ ராமாயணா ‘ எனும் திரைப்படம் – சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.‌ தொழில் துறையில் சில சிறந்த திறமையாளர்கள் –  உலக தரம் வாய்ந்த VFX குழு – நட்சத்திர நடிகர்கள் – பிரம்மாண்டமான மற்றும் அதிவேகமாக உருவாக்கப்படும் அரங்கங்கள் – என ‘ ராமாயணா ‘ இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திரைமொழியாகவும் மற்றும் உணர்வு பூர்வமான படைப்பாகவும்,  உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தாலும்… அவர்கள் ஒன்றாக திரையில் தோன்றும் நேரம் குறைவு என சொல்லப்படுகிறது.

”இப்படத்தின் தயாரிப்பாளர்கள் – பெரும்பாலான காவியங்களில் ராமரும், ராவணனும் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை என்ற அசலான வால்மீகி உரைக்கு உண்மையாக இருப்பது என்பதை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் உலகங்கள் தனித்தனியாகவே உள்ளன. உச்சக்கட்ட போரில் விதி அவர்களை நேருக்கு நேர் கொண்டு வரும் வரை அவர்களின் கதைகள் இணையாகவே விரிவடைகின்றன. அசல் கதையின் படி, சீதை கடத்தப்பட்ட பின்னரே ராமர்- ராவணனின் இருப்பை பற்றி அறிந்து கொள்கிறார். மேலும் இலங்கையில் போர்க்களத்தில் மோதல் ஏற்படும் வரை இருவரும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் சந்திக்க மாட்டார்கள்.”

ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் கதாபாத்திரங்களை தனித்தனியாக வைத்திருக்க நிதிஷ் திவாரி மற்றும் குழுவினரின் படைப்பு தேர்வு – ராமாயணத்திற்கு ஒரு விருப்பத்திற்குரிய கதை ஆழத்தை உருவாக்குகிறது. அவர்களின் தனித்தனியான பயணங்களை ஒன்று தர்மத்தையும், நல்லொழுக்கத்தையும் உள்ளடக்கியதாகவும்…. மற்றொன்று ஈகோ மற்றும் சக்தியால் இயக்கப்படுவதாகவும் … பட்டியலிடுவதன் மூலம் இந்த திரைப்படம் – அவர்களின் இறுதி மோதலுக்கான உற்சாகத்தை அதிகரிக்கிறது. இந்த தாமதமான மோதல் அவர்களின் கதாபாத்திரத்தை சுயாதீனமாக உருவாக்க அனுமதிக்கிறது. இதனால் அவர்களின் இறுதி மோதலை இன்னும் சக்தி வாய்ந்ததாக மாற்றுகிறது. ராவணனான யாஷ், சீதாவாக நடிக்கும் சாய் பல்லவி மற்றும் அனுமனாக நடிக்கும் சன்னி தியோலுடன் திரை நேரத்தை பகிர்ந்து கொள்ளும் அதே தருணத்தில்.. ரன்பீர் கபூர் உடனான காட்சிகள் நிச்சயமற்றதாகவே உள்ளன. ரன்பீர் கபூர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் &  வார் படத்தில் விக்கி கௌசல் மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அந்த படத்திற்காக அவர் பராமரிக்கும் குறிப்பிட்ட தோற்றம் அவரது பங்களிப்பு தருணங்கள் கிடைப்பதை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக தயாரிப்பு, தாமதங்கள், திட்டமிடல்  ஆகியவற்றை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இதனால் இந்தக் கட்டத்தில் ராமாயணத்திற்காக அவர் தனது தோற்றங்களை மாற்றிக் கொள்வது என்பது சாத்தியமற்றது.

படத்தின் தயாரிப்பு பணிகள்- தற்போது நகரத்தில் உள்ள பிரம்மாண்டமான அரங்க வடிவமைப்புப் பணிகளாக நடந்து வருகிறது. இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்படுகிறது. முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையிலும், இரண்டாவது பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையிலும் வெளியாகிறது.  ரன்பீர் கபூர் ஏற்கனவே தனது பகுதிகளை நிறைவு செய்து விட்ட நிலையில்… மே மாத தொடக்கத்தில் உஜ்ஜயினியில் உள்ள மகாமல் ஆலயத்திற்கு சென்ற பிறகு, யாஷ் தனது பகுதிகளில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையில் பகிரப்பட்ட திரை நேரத்தை குறைப்பதற்கான தேர்வு.. நவீன சினிமா திரை மொழியை காட்சியாக வடிவமைக்கும் போது, அசல் காவியத்தின் சாரம்சத்தை மதிக்கும் தயாரிப்பாளர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நட்சத்திரங்கள் நிறைந்த படங்கள் – பெரும்பாலும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க , பெரிய பெயர்களுக்கு இடையிலான தொடர்புகளை கட்டாயப்படுத்தும் ஒரு காலத்தில் …இராமாயணம் என்பது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கதை சார்ந்த பாதையை பிரதிபலிக்கிறது.  இது நம்பகத் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது மற்றும் புராணக் கதையை ஆழமாக மறுபரிசீலனை செய்வதை உறுதி அளிக்கிறது.

ராமாயணம் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாகும். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ,யாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் பிரம்மாண்டம்- மெகா ஸ்டார் நடிகர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தெய்வீக புராண இதிகாசத்தை அற்புதமான முறையில் வழங்குவதற்கும், இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு சினிமா அதிசயத்தை உருவாக்குவதற்கும், இந்தப் படம் உறுதியளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img