Quantum Film Factory என்ற பட நிறுவனம் தயாரிப்பில், R. K. வித்யாதரன் இயக்கத்தில்,யோகிபாபு, பூமிகா சாவ்லா, கே.எஸ். ரவிகுமார் ஆகியோறது நடிப்பில் நேற்று ( 23.05.2025 ) வெளியான ” ஸ்கூல் ” திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் ” ஸ்கூல் ” படம் பார்ப்பதற்கு திரையரங்கிற்கு வரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச டிக்கெட் தருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
முழுக்க முழுக்க பள்ளியில் நடக்கும் கதை இது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எவ்வாறு போராட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை எப்படிப்பட்ட அணுகு முறையில் வளர்க்க வேண்டும் என்பதையும் சொல்லுகிறது இந்த படம்.
இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த இலவச டிக்கெட் பெற 9514799128 இந்த நம்பருக்கு போன் செய்து பெற்றுக் கொள்ளலாம்.