நன்கு படித்தும், பெரிய வேலைக்குத் தான் செல்வேன் என்று சரியான வேலை கிடைக்காமல் சுற்றி வருகிறார் டோவினோ தாமஸ். காதல் கைகூட வேண்டும், தனது அம்மாவின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்குச் செல்கிறார் டோவினோ.
சரியாக அந்த சமயத்தில் தான் மலைவாழ் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான நிலம், வீடு உள்ளிடவற்றைக் கேட்டு அரசிடம் போராடி வருகின்றனர்.உள்ளிருப்பு போராட்டமாக மலைபிரதேசத்தில் குடிசை அமைத்து அம்மக்கள் போராடி வருகின்றனர்.
இவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீஸ் உயரதிகாரி சேரன் தலைமையில், அங்கு போலீஸ் குவிக்கப்படுகிறது. அங்கே டோவினோவிற்கும் ஹெட் ஹான்ஸ்டபிளாக இருக்கும் சுராஜூக்கும் நல்லதொரு நட்பு வளர்கிறது. இந்த போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளின் உதவி இருக்கலாமோ என தேடுதல் வட்டை நடக்கிறது. இதில் சுராஜ் கொல்லப்படுகிறார். இதனால் போலீஸார் அடக்குமுறையை கையில் எடுகின்றனர்.
சுராஜின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை டோவினோவுக்கு தெரியவருகிறது. அதன்பிறகுமலைகிராம மக்களின் போராட்டம் என்னவானது.?? டோவினோ தாமஸ் இக்கதையில் எந்த இடத்தில் ஹீரோவாக தெரிந்தார்.?? இந்த கதையில் யார் நரி.??? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
டோவினோ தாமஸ். ப்ரியம்வதா கிருஷ்ணன், நடிப்பு இயல்பு .ஒன்றிரண்டு காட்சிகளில் வரும் அந்த தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் கூட கச்சிதம். படத்தின் வலுவிற்கு ஏற்றவாறான ஒரு கதாபாத்திரமாக சேரனின் நடிப்பு இல்லாமல் போனது படத்தில் பெரும் குறைதான் என்றே கூறலாம். படத்திற்கு மற்றொரு பலமாக சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.
படத்தின் காதல் காட்சிகள், பாடல்கள் போன்றவை அதிகமாக இருப்பதாக உணரப்படுகிறது. அவை சற்று குறைத்திருக்கலாம். மேலும் படத்தின் கதை இடைவேளைக்கு பிறகு தான் சூடு பிடிக்க தொடங்குகிறது.
ஆதுவாசிகள், அரசு இவர்களுக்கு இடையேயான கார்ப்பரேட் ஆதரவு – மண்ணின் மைந்தர்கள் போராட்டத்தை நிகழ்வுகளை உண்மைக்கு நெருக்கமாக யதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அனுராஜ் மனோகர்.
நரித்தந்திரம் மிக்க மனிதர்களை, திருந்திய ஒரு நரி ஆடும் வேட்டையே நரி வேட்டை