spot_img
HomeNewsஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டியோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டியோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!

 

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும்
தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி டேயோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா அவர்கள் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தார்.

“பாபி டேயோல் அவர்களின் ‘அனிமல்’ படத்தில் அளித்த அந்த மௌன நடிப்பு நம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ஹரி ஹர வீரமல்லு படத்திலும் அவரது கதாபாத்திரத்தின் வழித்தோணியை முழுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன்,” என்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.

இந்த புதிய வடிவமைப்பின் மூலம் ஔவரங்கசீப்பின் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கதையின் பின்னணி, உந்துதல், உடல் மொழி என அனைத்தும் பாபி டேயோலின் நடிப்பு சக்திக்கு ஏற்ப மறு வடிவம் பெறப்பட்டுள்ளது.

“புதிய கதாபாத்திர வடிவத்தை நான் அவரிடம் சொன்னபோது, பாபி டேயோல் அவர்கள் மிகுந்த உற்சாகத்தைத் தெரிவித்தார். அவருக்கு, சவாலான வேடங்களில் நடிப்பதும், புதியதொரு வடிவில் ரசிகர்களிடம் தன்னை காண்பிப்பதும் மிகவும் பிடிக்கும். ஹரி ஹர வீரமல்லு படத்தில் அவர் மிகுந்த தீவிரம் கொண்ட தோற்றத்தில் தோன்றுகிறார். அவரது பார்வையின் மூலம் தான் சொல்லும் உணர்வுகள், அவரது திரை தோற்றம், ஆளுமை அனைத்தும் கதையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன. அவருடன் பணியாற்றிய அனுபவம் மிக சிறப்பானது,” என்கிறார் இயக்குநர்.

இவ்வாறு புதிதாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம், பாபி டேயோலின் தற்போதைய பான் இந்தியா புகழுக்கும், அவரிடம் இருக்கும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கும் நிச்சயமாக நீதியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img