spot_img
HomeNewsசூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் - டீசர் வெளியீடு..!!

சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!

தமிழ் சினிமா முழுக்க புதுவித திகில் கதைசொல்லும் வழக்கம் தற்போதைய டிரெண்ட் ஆக இருந்து வருகிறது. இந்த வரிசையில் தி பிளாக் பைபிள் (சப்டைட்டில்: 22:18), முற்றிலும் புது வகையான திரில்லர் அனுபவத்தை உறுதியளிக்கும். பேய் படங்கள் என்றாலே “பேய்-சந்திப்பு-பழிவாங்கும்” என அதிகமாகப் பயன்படுத்தப்படும் கதைக்களத்தை தவிர்த்து, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் மர்மம், நாட்டுப்புற மரபு மற்றும் பயம் நிறைந்த ஒரு கதையை கொண்டுவருகிறார்.

“சுழல் – தி வொர்டெக்ஸ்ட் என்ற இணைய தொடரில் தனது நடிப்பிற்காக மகத்தான வரவேற்பைப் பெற்ற எஃப்.ஜே. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாந்தினி தமிழரசன், ஸ்ரீஜா ரவி, மோனா பெத்ரா மற்றும் அய்ரா பாலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் டீசர், ஏற்கனவே சினிமா ஆர்வலர்கள் மற்றும் திகில் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ள அஸ்தினாபுரம் என்ற நிழல் கிராமத்தில் இந்தப் படத்தின் கதை நடக்கிறது.

காலனித்துவ கால மாந்திரீகம் மற்றும் சூனியத்தால் நீண்ட காலமாக சபிக்கப்பட்ட ஒரு நிலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க துடிக்கும் இரண்டு பெண்கள் அலிஷா மற்றும் அவரது தாயாரைச் சுற்றி கதை சுழல்கிறது. ஆனால் அவர்கள் தப்பி ஓட முயற்சிக்கும்போது, அவர்கள் நினைத்ததை விட ஆழமான, ஆபத்தான ஒரு இடத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அலிஷாவின் காதலன் மட்டுமே அவர்களுடன் நிற்கும் நிலையில், மூவரும் அமைதிக்கு பின் இருக்கும் பயங்கரங்களையும், அதில் இருந்து தப்பிக்க மறுக்கும் சாபத்தையும் எதிர்கொள்ள வேண்டும்.

தி பிளாக் பைபிள் படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை EPS பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு பாலா ஜி ராமசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img