spot_img
HomeNewsஹிர்து ஹாரூன் நாயகனாக நடிக்கும் புதிய படம் “டெக்ஸாஸ் டைகர்”!!

ஹிர்து ஹாரூன் நாயகனாக நடிக்கும் புதிய படம் “டெக்ஸாஸ் டைகர்”!!

கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்து,  உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.

“ஃபேமிலி படம்”  படத்தை தயாரித்த “UK Squad” எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து “டெக்சாஸ் டைகர்” படத்தையும் தயாரிக்கின்றனர்.

படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய  சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக  வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img