ஜூன் 30 ஆம் தேதி அலையன்ஸ் பிரஞ்சைஸ் ஆப் மெட்ராஸில் (Alliance Francaise of Madras) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. இக்குறும்படப் போட்டியை மாஸ்டரிங் கேம்பஸ் கேரியருடன் (Mastering Campus Carriers (MC2)) இணைந்து வடிவமைத்து ஒருங்கிணைக்கப்பட்டது.
கடந்த ஜூன் 6 ஆம் தேதி திரைப்பட போட்டியின் விதிமுறைகளும், “அன்றொரு நாள் கழிப்பறையில்” என்ற போட்டியின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது.
இன்று நடந்த நிகழ்ச்சியில்,
போட்டியின் வெற்றியாளர்களை நடுவர்கள் திரைப்பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, திரைப்பட இயக்குனர். கிருத்திகா உதயநிதி மற்றும் கவிஞர் யுகபாரதி அவர்களும் அறிவித்தனர் .
முதல் இடத்தையும் ஒரு லட்சம் ரொக்க பரிசையும் ‘டைலர் டர்டன் கினோ பிஸ்ட்’ தயாரிப்பு நிறுவனத்தில் தங்கள் கதையை சொல்லும் வாய்பையும் பிரணத்தி சாம்பள்ளே அவர்கள் இயக்கிய “சான்டாட்ஸ்” குறும்படம் தட்டிச்சென்றது .
இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்று ‘டைலர் டர்டன் கினோ பிஸ்ட்’ தயாரிப்பு நிறுவனத்தில் தங்கள் கதையை சொல்லும் வாய்பை பெரும் குறும்படங்கள்,
2. வெளிக்கி , ஆனந்த். எம். ஜே
3. முரல் , அமர் கீர்த்தி
அத்துடன் இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை திரையிடப்பட்டது மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள நடுவர்களுடன், திரைப்பட இயக்குனர் ஷான் அவர்களுடன் இணைந்த சிறு கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திரையிடப்பட்ட குறும்படங்களின் தலைப்புகள் குறித்தும் படங்களின் கதைகளை குறித்தும் பங்கேற்பாளர்களின் கேள்வி பதில்களுடனும் இன்னும் சில கலந்துரையாடல்களுடன் விழா இனிதே நிறைவடைந்தது.