spot_img
HomeNewsரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைக்கும் ரஜினியின் கூலி!

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள சன் பிக்சர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கூலி, இதுவரை வெளிநாடுகளில் அதிக திரையில் ரிலீஸ் செய்யப்படும் ஒரு தமிழ் படம் என்ற சாதனையை பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெறப்போகிறது உறுதி.
ரஜினி உடன் கூலி படத்தில் இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்து கூலி படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். கூலி படத்தின் முதல் சிங்கிள் Chikitu ஏற்கனவே இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படம், தற்போது ஒரு மிகப் பெரிய சாதனையை புரிந்து, தமிழ் சினிமாவின் வரலாற்றில் வெளிநாட்டு சந்தையில் அதிகபட்ச விற்பனையான படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதாவது, இதுவரை வெளிநாடுகளில் எந்த தமிழ் திரைப்படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு, ‘கூலி’ திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது . இது ரஜினியின் உலகளாவிய பிரபலத்தையும், லோகேஷின் மாஸ் இயக்கமும், சன் பிக்சர்ஸின் ப்ரொடக்‌ஷன் வெல்யூவும் சேர்ந்து உருவாக்கிய மாபெரும் வரவேற்பைக் காட்டுகிறது.
சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புகழ்பெற்ற நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்தப் படத்தின் உலகளாவிய விநியோகத்தை ஆதரிக்கிறது.
உலகெங்கிலும் 130க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ள ஹம்சினி என்டர்டெயின்மென்ட், இந்திய சினிமாவை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சென்றதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படத்தை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படத்தை 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டதும் அவர்களின் சமீபத்திய முயற்சிகளில் ஒன்றாகும்.
கூலி படத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அதன்படி, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விநியோகத்தை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படம் உலகம் முழுவதும் அதிகமான நாடுகளில் வெளியாக உள்ளது. கூலி என்பது வெறும் ஒரு படம் மட்டுமல்ல ஒரு சகாப்தமாக உருவாகி வருகிறது. இது ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகும் இந்திய சினிமா ரசிகர்களுக்கான உலகளாவிய கொண்டாட்டமாக இருக்க போகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img