spot_img
HomeNewsமாபெரும் வெற்றி பெற்ற தனுஷின் " அம்பிகாபதி " திரைப்படம் மீண்டும் வெளியாகிறது

மாபெரும் வெற்றி பெற்ற தனுஷின் ” அம்பிகாபதி ” திரைப்படம் மீண்டும் வெளியாகிறது

 

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில், 2013 ஆம் வெளியான படம் “அம்பிகாபதி”.

இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தினை, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், AI தொழில்நுட்பத்தில் புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி மீண்டும் தமிழகமெங்கும் வெளியிடவுள்ளது.

தமிழில் முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் இந்தியில் அறிமுமகமான முதல் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. இந்தியில் “ராஞ்சனா” என்ற பெயரில் வெளியான இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது.

இப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இங்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தமிழகமெங்கும் பெரும் வசூல் வெற்றியைக் குவித்தது குறிப்பிடதக்கது.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை, பட்டி தொட்டி எங்கும் வரவேற்பைப் பெற்று இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் ஒரு தலைக்காதலைச் சொல்லும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது.

இப்படம் தற்போது நவீன தொழில் நுட்பத்தில் பல்வேறு காட்சிகள் மெருக்கேற்றப்பட்டு, AI தொழில்நுட்பத்தில் புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன் வெளியிடப்படவுள்ளது.

அருண் விஜய்யின் ” தடையறதாக்க ” படத்தின் ரீ ரிலீஸ் வெற்றியை தொடர்ந்து UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், வரும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிடுகிறது.

ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img