கலையரசன், பிரியாலயா, பிரேம்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் ட்ரெண்டிங் என்ன சொல்ல வருகிறது ?
யூட்யூபில் பிரபலமாக இருக்கும் கலையரசனும் பிரியாலயாவும் நன்றாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் தருணத்தில் அவர்களின் யூட்யூப் முடக்கப்படுகிறது. இதனால் வருமானத்தை இழந்த இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கும் நேரத்தில் கடன் கொடுத்தவன் கழுத்தில் கத்தியை வைக்கிறான். என்ன செய்வது என்று அறியாமல் இருக்கும் தருணத்தில் அவர்களுக்கு ஒரு போன் வருகிறது. வீட்டில் இருந்தபடி நீங்கள் எங்கள் கேம் ஷோவில் கலந்து கொண்டால் உங்களுக்கு இரண்டு கோடி பரிசு கிடைக்கும் எனக் கூற இருவரும் சம்பாதிக்கின்றனர். இதன் பிரதிபலன் என்ன சொல்ல வருகிறது ட்ரெண்டிங்.
அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார். இனி இவரும் இது போன்ற கதைகளை தெரிவு செய்து கதையின் நாயகனாக உயரலாம். தொடரலாம்.
மீரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரியாலயாவும் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு இவரும் முன்னணி நட்சத்திர நடிகையாக உயர்வார்.
இவர்கள் இருவர் மட்டுமே திரையை பெரும்பாலான தருணங்களை ஆக்கிரமித்துக் கொள்ள சலிப்பில்லாத வகையில் திரைக்கதையை நகர்த்தியிருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் மீண்டும் அவர்கள் இது போன்றதொரு விளையாட்டில் ஈடுபடுவது சுவராசியத்தை குறைக்கிறது.
ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய இயக்குநர் மைய கதாபாத்திரம் அதில் தடுமாறுவது போல் அமைத்திருப்பது பலவீனம்.
‘டாஸ்க்கை லைப்பாக எடுத்துக்காதே’ என ஆண் கதாபாத்திரமும் , ‘நீயும் லைஃபை டாஸ்க்காக எடுத்துக் கொள்ளாதே ‘ என பெண் கதாபாத்திரமும் பேசும் உரையாடல் கவனம் ஈர்க்கிறது. இன்றைய காதலுக்கான புது விளக்கத்தையும் வழங்குகிறது.
ஒளிப்பதிவு , பின்னணி இசை , படத்தொகுப்பு ,இந்த மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இயக்குநரின் எண்ணத்திற்கு வலிமை சேர்த்திருப்பதுடன் ரசிகர்களிடத்திலும் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கேம் ஷோ நடத்துவது யார், ஏன் நடத்துகிறார்கள் என்று கூறப்பட்டாலும் நமக்கு என்னவோ திரைக்கதையில் ஏதோ ஒரு தொய்வு ஏற்படுகிறது. முதல் ஒரு மணி நேரம் இருந்த விறுவிறுப்பு, பிறகு நம்மை சோர்வடைய செய்கிறது. ஒரு பங்களா அதற்குள்ளாக இரண்டரை மணி நேரம் படம் செல்வது நம்மை ஏதோ செய்ய வைக்கிறது. மொத்தத்தில் ட்ரெண்டிங் ட்ரெண்டிங் இல்லாமல்..
ரேட்டிங் – 2 / 5