நண்பர்கள் இருவர் தங்கள் காதலியுடன் மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா செல்ல அங்கே காதலர்களுக்குள் என்ன நடக்குமோ அதை நடத்துவதற்காக கதாநாயகன் படாத பாடுபட இறுதியில் தன் முயற்சியில் வெற்றி காண்கிறான். வெற்றியின் மிதப்பில் ஒரு சிகரெட்டை பத்த வைத்து சந்தோஷத்தை அனுபவித்துவிட்டு தன் காதலியை அழைக்க அவள் உயிரற்ற உடலாக இருக்கிறாள், பிறகு நடப்பது என்ன ? இதுவே யாரும் அறியான் கதை சுருக்கம்.
அப்பாவி – கொலைக்காரப் பாவி என இரண்டு வேடத்திலும் தினேஷ் கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால் அழும் காட்சியில் தான் நான் புதுமுகம் என்பதை நிரூபிக்கிறார்.
தினேஷின் காதலியாக நடித்திருக்கும் பிரானாவை விட, தினேஷின் நண்பர் ஆனந்த் பாண்டியின் காதலியாக நடித்திருக்கும் சியாமள் கவர்ச்சியில் கலக்குகிறார்.
அப்புக்குட்டி – தம்பி ராமையா ஆகியோர் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
ஒரு குறும்படத்திற்கான கன்டென்ட்டை முழு நீள திரைப்படமாக உருவாக்க முயற்சித்து.. அதற்கான கன்டென்ட்டை உருவாக்காமல் படத்தை வழங்கி இருப்பது. இயக்குநரின் படைப்பு ரீதியான பற்றாக்குறை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.
சிறிய முதலீட்டு திரைப்படம் என்றாலும் அப்புக்குட்டி மற்றும் தம்பி ராமையா தொடர்பான காட்சியின் நீளம் ரசிகர்களை சோதிக்கிறது. போனையும் மீறி கொட்டாவி வருகிறது.
நாயகன் தினேஷ் மனநல மருத்துவரான தம்பி ராமையாவை சந்தித்து தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிப்பதும்.. அதன் பிறகு நடப்பதும் தெளிவை விட குழப்பத்தையே உண்டாக்குகிறது.
ஒளிப்பதிவாளர் எல் டி – இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான தரத்தை வழங்கியிருக்கிறார்கள்.
ஒரு ஐந்து பேரை வைத்துக் கொண்டு ஒரு பங்களாவையும் வைத்துக்கொண்டு ஆபாசம் எனும் அங்கு சுத்தை எடுத்து பயணிக்க ஆரம்பிக்கும் இயக்குனருக்கு திரைக்கதையில் தெளிவில்லாமல் புரிதல் இல்லாமல் நம்மையும் குழப்பி அவரும் குழம்பிக் கொள்கிறார் என்பது எமது கருத்து