spot_img
HomeNewsஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது!

ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது!

 

சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற நவகோடி கூடைப்பந்து போட்டி, இளம் விளையாட்டு திறமையாளர்களின்  கொண்டாட்டமாக மாறியது. உள்ளூர் அணிகள் வயது வாரியாகப் போட்டியிட்டதால், இந்த நிகழ்வு அதிக உற்சாகமானதாக மாறி பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்தது.

இந்தப் போட்டியின் சிறப்பம்சங்களில் ஒன்று முன்னாள் இந்திய நெட்பால் அணித் தலைவரும், நடிகையுமான பிராச்சி தெஹ்லான், முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். இவர் ‘மாமாங்கம்’ திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர். பிராச்சி தெஹ்லான் அறக்கட்டளை மூலம் இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்குவித்து வருகிறார். அவரது வருகை இந்த நிகழ்வுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது.

“உள்ளூர் அணிகள் போட்டியிடுவதைப் பார்ப்பது அற்புதமான அனுபவம். ஒவ்வொரு போட்டியும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. தேசிய அளவிலான வீரர்களைப் பார்ப்பது போல் உணர்ந்தேன். இந்த இளம் கூடைப்பந்து வீரர்களின் திறமையைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.”

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், போட்டி முடிவில் நான்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5,000 உதவித்தொகையை தெஹ்லான் அறிவித்தார். இது வெற்றியாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது பல்வேறு வயதுப் பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவரது அறக்கட்டளை மூலம்  வழங்கப்படும் இந்த உதவித்தொகைகள், இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“மாற்றத்தைக் கொண்டுவர உதவும் இந்த மகத்தான நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறிய ஊக்கம் கூட ஒரு விளையாட்டு வீரரின் கனவுக்கு சிறகுகளை கொடுக்கும். நம் நாட்டின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்” என்றார்.

இது போன்ற முயற்சிகளுடன் நடைபெறும் நவகோடி டார்னமெண்ட் வெறும் போட்டியாக மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்கால சாம்பியன்களை வளர்க்கும் முக்கிய முயற்சியாகவும் திகழ்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img