spot_img
HomeNewsநடிப்பில் புதிய சவால்களை கொண்ட படமாக 'பிளாக்மெயில்' அமைந்தது"- நடிகை தேஜூ அஸ்வினி!

நடிப்பில் புதிய சவால்களை கொண்ட படமாக ‘பிளாக்மெயில்’ அமைந்தது”- நடிகை தேஜூ அஸ்வினி!

 

தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி தற்போது வெளியாக இருக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘படாக் படாக்’ பாடலில் ஜிவி பிரகாஷ்குமார்- தேஜூ அஸ்வினி இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த வைரல் ஜோடி தற்போது பெரிய திரையிலும் இணைந்துள்ளது. இந்த முறை இன்னும் தீவிரமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் கதைக்களமாகவும் அமைந்திருக்கிறது. எனர்ஜிடிக் மற்றும் யூத்ஃபுல் கதாபாத்திரத்தில் மட்டுமே இதுவரை பார்த்திருந்த தேஜூ அஸ்வினி முதல் முறையாக சீரியஸான பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“வழக்கமான நடிப்பைத் தாண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க ‘பிளாக்மெயில்’ திரைப்படம் இடம் கொடுத்தது. புதுவிதமான அனுபவமாக இது அமைந்தது. இயக்குநர் மு. மாறன் அவர்களின் முந்திய படங்களான ‘கண்ணை நம்பாதே’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். ‘பிளாக்மெயில்’ படத்தில் என்னை கதாநாயகியாக கேட்டபோதும் நிச்சயம் நடிப்பை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரமாக அமையும் என்ற நம்பிக்கையில் சம்மதித்தேன்” என்றார்.

ஜிவி பிரகாஷ்குமாருடன் நடித்தது பற்றி அவர் பகிர்ந்து கொண்டதாவது, “ஜிவி பிரகாஷ் சாருடன் இதற்கு முன்பு கலர்ஃபுல்லான மியூசிக் வீடியோ ஒன்றில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் முற்றிலும் அதற்கு நேரெதிரானது. தொழில்நுட்ப ரீதியாகவும் கதை சொல்லல் மற்றும் எதிர்பாராத திருப்புமுனை மூலம் படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை பார்வையாளர்களை நிச்சயம் கட்டிப்போடும்” என்றார்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: மு. மாறன்,
தயாரிப்பு: தெய்வக்கனி அமல்ராஜ்,
வழங்குபவர்: ஜெயக்கொடி அமல்ராஜ்,
பேனர்: JDS ஃபிலிம் ஃபேக்டரி,
இசை: சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு: கோகுல் பெனாய்,
படத்தொகுப்பு: சான் லோகேஷ்,
கலை: SJ ராம்,
ஆக்‌ஷன்: ராஜசேகர்,
நடனம்: பாபா பாஸ்கர் & சாய் பாரதி,
பாடல் வரிகள்: சாம் சி.எஸ்., ஏக்நாத் & கார்த்திக் நேத்தா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img