spot_img
HomeNews’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

 

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் மீடியா மத்தியில் பாசிடிவ்வான ரெஸ்பான்ஸ் இருந்தது. இந்த ஆதரவினால் படத்திற்கான திரைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.

நிர்வாகத் தயாரிப்பாளர் ஆடிட்டர் விஜயன், “இந்தப் படம் புதுவிதமான சந்தோஷமான வெற்றி அனுபவத்தைக் கொடுத்துள்ளது. எங்களுக்கு இது முதல் படம் என்பதால் ரிசல்ட் எப்படி இருக்கும் என பயந்து கொண்டே இருந்தோம். ஆனால், மக்களின் ரிசல்ட் பார்த்ததும் பெருமையாகவும் திருப்தியாகவும் இருந்தது. உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. கிளைமாக்ஸ் முடிந்தும் ரசிகர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை தியேட்டர் விசிட்டில் பார்த்தோம். அனைத்து தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்களுக்கு நன்றி”.

இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம், “இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. எல்லாருடைய கடின உழைப்பும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சவுண்ட் மிக்சிங் அகமதுவின் பணி முக்கியமானது. மற்ற தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்களுக்கு நன்றி”.

ஒளிப்பதிவாளர் கேஜி, “’ஜென்ம நட்சத்திரம்’ வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. கஷ்டப்பட்டுதான் இந்தப் படம் எடுத்தோம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் பார்த்து ரசித்த அனைத்து பார்வையாளர்களுக்கும் நன்றி”.

எடிட்டர் குரு சூர்யா, “படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இன்னும் நன்றாக போகும் என நம்புகிறோம்”.

கலை இயக்குநர் ராம், “இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இரண்டாவது வாரம் படம் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் ஆதரவு கொடுங்கள்”.

நடிகர் மைத்ரேயன், “இயக்குநர் மணி மற்றும் என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. பல காட்சிகளில் சக நடிகர்கள் என்னை கூல் செய்து நடிக்க வைத்தார்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”.

நடிகை மால்வி மல்ஹோத்ரா, “படத்திற்கு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி. எல்லோரும் கடின உழைப்பு கொடுத்திருக்கிறோம். தமிழ் பார்வையாளர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு மறக்க முடியாதது. இன்னும் படம் பார்க்காதவர்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும்”.

நடிகர் முனீஷ்காந்த், “என்னுடைய படக்குழுவினருக்கு நன்றி! ஹாரர் படம் என்பதால் காமெடி நாங்களே சேர்த்து செய்தால் அந்த எஸ்சென்ஸ் போய்விடும் என இயக்குநர் நினைக்கவில்லை. எங்களுக்கான இடம் கொடுத்தார். சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. யாசரும் நன்றாக காமெடி செய்தார்”.

நடிகர் அருண் கார்த்திக், “இந்தப் படத்திற்கு கடின உழைப்பு கொடுத்திருக்கிறோம். எல்லோருக்கும் முனீஷ் அண்ணாவின் காமெடி பிடித்திருந்தது. இதுவரை படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கும் நன்றி”.

நடிகை ரக்‌ஷா ஷெரின், “படத்திற்கு நல்ல ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. இன்னும் படம் பார்க்காதவர்கள் நிச்சயம் திரையரங்கிற்கு சென்று பாருங்கள்”.

நடிகர் கார்த்திக், “இது என்னுடைய முதல் தமிழ் படம். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி!”.

கேபிள் சங்கர், “இந்த டீம் எனக்கு மிகவும் பழகினதுதான். இந்தப் படம் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெறும் என ரிலீஸூக்கு முன்பே சொல்லியிருந்தேன். அது நிரூபணமாகி உள்ளது மகிழ்ச்சி. சவுண்ட், ஆர்ட் என தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் அதே தரத்தில் எல்லா திரையரங்கிலும் வருமா என பயந்தார்கள். ஆனால், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் கூட அதே தரத்தில் கொடுத்திருக்கிறார்கள். ரோமியோ பிக்சர்ஸ் அட்டகாசமாக ரிலீஸ் செய்து கொடுத்திருக்கிறார்கள். எல்லா சின்ன படங்களுக்கும் கமர்ஷியல் வெற்றி தேவை”.

நடிகர் யாசர், “தொடர்ச்சியாக நெகட்டிவ் கதாபாத்திரம் செய்து வந்தேன். ஆனால், எனக்கு காமெடி கதாபாத்திரம் நடிக்க பிடிக்கும். அந்த வாய்ப்பு இந்தப் படத்தில் வந்தது மகிழ்ச்சி. முதல் முறையாக காமெடி கதாபாத்திரம் நன்றாக நடித்திருக்கிறேன் எனப் பாராட்டு வந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. நன்றி!”.

இயக்குநர் மணிவர்மன், “நினைத்ததை விட இந்தப் படம் நன்றாக போய் கொண்டிருப்பதால் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார். மல்டிஃபிளக்ஸ் திரையரங்கை விட சிங்கிள் ஸ்கிரீனில் படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. நேரில் ஆடியன்ஸ் ரியாக்‌ஷன் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாரம் போலவே அடுத்த வாரமும் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த வாய்ப்பு கொடுத்த அமோகம் ஸ்டுடியோஸ் சுபாஷினி மேம் மற்றும் விஜயன் சாருக்கு நன்றி. நிச்சயம் அடுத்து சக்சஸ் மீட்டில் சந்திப்போம். படம் ஆரம்பித்ததில் இருந்தே ஆதரவு கொடுத்து வரும் கேபிள் சங்கர் மற்றும் ஈரோடு மகேஷூக்கு நன்றி”.

நடிகர் தமன், “என்னுடைய முந்திய படமான ‘ஒரு நொடி’ அதன் பட்ஜெட்டை எங்களுக்கு திரும்ப கொடுத்தது. ஆனால், ‘ஒரு நொடி’ படத்தின் மொத்த பட்ஜெட்டை ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் மூன்று நாள் கலெக்‌ஷன் கொடுத்துள்ளது. இதற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாரின் ஆதரவு முக்கியமானது. படத்தை அருமையாக மார்க்கெட்டிங் செய்த அமோகம் பிக்சர்ஸூக்கும் நன்றி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படக்குழுவில் யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால், படம் ரிலீஸ் ஆன பின்பு கலெக்‌ஷன் பார்த்த பின்புதான் நிம்மதியாக இருந்தது. தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில்தான் முதலில் படம் திரையிட்டோம். மக்கள் கொடுத்த ஆதரவிற்கு பிறகு 200- 250 என்ற எண்ணிக்கையில் ஸ்கிரீன் எண்ணிக்கை அதிகரித்தார்கள். ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தது. ரசிகர்கள் மற்றும் மீடியா கொடுத்த ஆதரவிற்கு நன்றி”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img