‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- கார்த்திக் கட்டமனேனி- டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது
‘ஹனுமான்’ படத்தின் மூலம் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பின் ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- அடுத்ததாக ‘மிராய் ‘படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான அளவில் அதிரடி ஆக்சன் படமான இதனை தொலைநோக்கு பார்வை திறன் கொண்ட இயக்குநர் கார்த்திக் கட்டமனேனியின் இயக்கத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தது. அதன் பிரம்மாண்டமான காட்சி அமைப்பு – அதிவேகமான கதை சொல்லும் பாணி மற்றும் ஒரு வளமான கற்பனையுடன் கூடிய பிரபஞ்சத்துடனான ‘மிராய் ‘சூப்பர் ஹீரோ வரிசையில் மிகப் பெரும் புரட்சியாக இருக்கும் என உறுதி அளிக்கிறது.
படத்தின் இசை – ஜூலை 26 ஆம் தேதி முதல் வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலுடன் இப்படத்திற்கான இசை தொடர்பான விளம்பரப் பணிகள் தொடங்குகிறது. இதனை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ‘வைப் இருக்கு பேபி’ என மின்ன வைக்கும் டெக்னோ பீட் பாடலாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. இந்த பாடல் – முன்னணி ஜோடிகளான தேஜா சஜ்ஜா மற்றும் ரித்திகா நாயக் இடையேயான அற்புதமான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்துகிறது.
தேஜா சஜ்ஜா கரடு முரடான மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் ஒரு நவ நாகரிகமான உடையில் வலுவான வீரமிக்க ஜோதி போன்ற ஒளியை வெளிப்படுத்துகிறார். ரித்திகா நாயக் பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் தேஜா சஜ்ஜாவுடன் ஒரு தீவிரமான தருணத்தில் தோன்றுகிறார். அவர்களுக்கு பின்னால் சூழலும் தங்கத்தினாலான ஆற்றல் மிக்க ஒரு மாயாஜால பாதையை உருவாக்குகிறது. இது ‘மிராய்’ படத்தின் புராண மற்றும் கற்பனை உலகத்துடன் பொருந்தி சென்று, புதிதாக வேறொரு உலகத்தை காட்சிப்படுத்துகிறது.
நடிகர் மனோஜ் மஞ்சு அச்சுறுத்தும் வில்லனாக நடிக்கிறார். இவருடன் ஷ்ரியா சரண் , ஜெயராம், ஜெகபதிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி படத்தை இயக்குவதுடன் ஒளிப்பதிவாளராகவும் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து வருகிறார். இப்படத்தின் திரைக்கதையையும் கார்த்திக் கட்டமமேனி வடிவமைத்துள்ளார். மணி பாபு கரணம் எழுத்து மற்றும் வசனத்தில் பங்களித்திருக்கிறார். கலை இயக்கத்திற்கு ஸ்ரீ நாகேந்திர தாங்கலா தலைமையேற்று ‘மிராய் ‘ படத்திற்கான உலகத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். இப்படத்திற்கு சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராக மேற்பார்வையிடுகிறார்.
‘கார்த்திகேயா 2’, ‘ஜாட்’ ஆகிய பிளாக் பஸ்டர் ஹிட் படங்களுக்கு பின்னால் உள்ள படைப்பாற்றல் மிக்க பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘மிராய்’- இந்நிறுவனத்தின் பான் இந்திய பயணத்தில் ஒரு துணிச்சலான படைப்பாக இருக்கும் என்பதை பிரதிபலிக்கிறது. இப்படத்தின் டீசரில் இடம் பிடித்திருக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் ..இப்படத்தின் சர்வதேச தரத்தை அடையாளப்படுத்துகிறது. மேலும் இது உலகளவிய தயாரிப்பு தரத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு படைப்பாகவும் அமைந்திருக்கிறது. உண்மையில் இந்தத் திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை எண்ணிக்கையிலான VFX காட்சிகளை கொண்டிருக்கிறது.
செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘மிராய்’ திரைப்படம் -2 D மற்றும் 3 D தொழில்நுட்பத்தில், எட்டு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர்கள் :
‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா , மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரியா சரண் , ஜெயராம், ஜெகபதி பாபு.
தொழில்நுட்பக் குழு :
இயக்குநர் : கார்த்திக் கட்டமனேனி
தயாரிப்பாளர்கள் : டி.ஜி .விஸ்வ பிரசாத்
கிருத்தி பிரசாத்
தயாரிப்பு நிறுவனம் : பீப்பிள் மீடியா ஃபேக்டரி
நிர்வாகத் தயாரிப்பாளர் : சுஜித் குமார் கொல்லி
இசை : கௌரா ஹரி
கலை இயக்கம் : ஸ்ரீ நாகேந்திர தாங்கலா
எழுத்து : மணி பாபு கரணம்