spot_img
HomeNewsஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் 25ஆம் வருடம் ; வெளியாகும் வார் 2 டிரைலர்

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் 25ஆம் வருடம் ; வெளியாகும் வார் 2 டிரைலர்

வார் 2 படத்தில் எண் 25க்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.இந்திய சினிமாவின் இரு பெரிய நட்சத்திரங்களான ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்டிஆரும் ஒரே படத்தில் இணைத்து, ஆதித்யா சோப்ரா ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸ் வரிசையில் இணைகிறது. இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார்.

இந்த வருடத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்டிஆரும் தங்களின் சினிமா வாழ்க்கையின் 25வது ஆண்டை அடைந்துள்ளனர் . இதனை கொண்டாடும்  விதமாக யஷ் ராஜ் நிறுவனம் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான வார் 2 படத்தின் ட்ரைலரை வருகின்ற ஜூலை 25ம் தேதியன்று  வெளியிடுவதாக இன்று  அறிவித்துள்ளனர்.

ஹ்ரித்திக் மற்றும் என்டிஆரின் இவர்களின் இந்திய சினிமாவுக்கான பங்களிப்பை பாராட்டும் விதமாக யஷ் ராஜ் நிறுவனம் ட்ரைலர் வெளியீட்டு அறிவிப்பை பகிர்ந்துள்ளனர்.

அதில் அவர்கள் பதிவிட்டபடி,”2025ம் ஆண்டில் இந்திய சினிமாவின் இரண்டு அடையாளங்கள் தங்களின் சிறப்பான 25 ஆண்டு சினிமா பயணத்தை நிறைவு செய்கின்றனர். வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த தருணத்தை கொண்டாட, வார் 2 பட ட்ரைலர் வருகின்ற ஜூலை 25ம் தேதியில் வெளியாகிறது!” என பகிர்நதுள்ளனர் .

வார் 2 திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img