ஹோட்டல் நடத்தி வரும் நாயகன் மணமுடிக்க மணமகளை தேடி நிச்சயம் செய்யும்போது தான் நாயகனும் நாயகன் குடும்பமும் ஒரு ரவுடி குடும்பம் என்று தெரிய வருகிறது. இதனால் திருமணம் தடைபட நாயகி எதிர்ப்பை மீறி நாயகனை கைப்பிடிக்கிறார். அன்று ஆரம்பிக்கிறது காதலுடன் மோதல். கதையின் கரு என்னவென்றால் இரண்டு நிமிடம் அமர்ந்து பேசினால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும். இந்த கருத்தை வைத்துக்கொண்டு இதற்கு திரைக்கதை அமைத்து பொழுதுபோக்கோடுன் ரசிக்கும்படியாக நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டர் ஆக பரோட்டாவில் என்னென்னன விதங்கள் இருக்கிறதோ அத்தனையும் நம் முன் கொண்டு வந்து புரோட்டா சாப்பிடும் ஆசையை நமக்கு ஏற்படுத்துகிறார் இயக்குனர் பாண்டிராஜ். தாய் மற்றும் மனைவி இருவரையும் சமாளிக்கும் கதாபாத்திரம். அதே சமயம் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பாத்திரம் என பல பரிமாணங்கள் நம் முன்னே காட்டினாலும் படம் முழுக்க காட்டுக்கத்தல் கத்துகிறார். சில நேரத்தில் என்ன பேசுகிறார் என்பதே புரியவில்லை. கத்தினால் கதாபாத்திரம் சிறப்பாகி விடும் என்பதை விஜய் சேதுபதி மாற்றிக்கொள்ள வேண்டும். அமைதியின் சத்தத்தை விட மிகுந்த சத்தம் எதிலுமே இல்லை.
நாயகி நித்யா மேனன் இவரைப் பற்றி நாம் கூறத் தேவையில்லை. நடிப்பில் அரக்கி. கணவரின் மீது காதல், காதலினால் வரும் மோதல், மோதலால் பிறந்த வீடு தேடி வரும் பெண்.. இதுவே பாதி படத்தில் இவரின் கதாபாத்திரம்,, இதை பார்க்கும் மக்களுக்கு ஒரு பக்கம் பரிதாபம் ஏற்பட்டாலும் இன்னொரு பக்கம் எரிச்சில்தான் ஏற்படுகிறது ஒரு சராசரி மருமகளின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறார்
கதைக்களம் கோவிலில் ஆரம்பித்து அந்த கோவில் களத்தில் பல கதாபாத்திரங்களை வரவைத்து அதற்குள் நகைச்சுவையும் திணித்து அடிதடி காட்சிகளையும் வரவைத்து உணர்ச்சி பிழம்புகளை உணர வைத்து திரைக்கதையில் தொய்வு இல்லாமல் தந்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
ஒரு சராசரி குடும்ப கதை என்றாலும் அந்த குடும்பத்தில் உள்ள சுவாரசியங்களை பிரச்சினைகளை, பிளவுகளை, உறவுகளை, உணர்ச்சிகளை, நிகழ்வுகளை நிலைப்படுத்தி நிறைவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்
ரேட்டிங்-3/5