spot_img
HomeNews'கிங்டம்' ட்ரைலர் வெளியீடு - எதிர்பார்ப்பின் உச்சத்தை எட்டியுள்ளது !

‘கிங்டம்’ ட்ரைலர் வெளியீடு – எதிர்பார்ப்பின் உச்சத்தை எட்டியுள்ளது !

 

விஜய் தேவராகொண்டா நடித்துள்ள “கிங்டம்” படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை கவுதம் தின்னனூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரிக்கின்றனர். படம் வரும் ஜூலை 31, 2025 அன்று திரைக்கு வரவுள்ளது.

ட்ரைலர் ஒரு கதையை மிக வலிமையாகவும் தாக்கத்தோடும் கொண்டு வருகிறது. சாதாரண ஆக்‌ஷன் மட்டும் அல்லாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான நெருக்கத்தை உணர்த்தும் பல உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விஜயின் ‘சூரி’ மற்றும் சத்யதேவின் ‘சிவா’ இடையேயான காட்சிகள் மிகுந்த கேமிஸ்ட்ரியுடன் உள்ளடக்கப்பட்டு, படம் ஒரு ஆழமான உணர்வை வழங்கப் போவதைக் காட்டுகின்றன. கதையின் உணர்வும், விழிப்பும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.

விஜய் தேவராகொண்டாவின் நடிப்பு, அவர் வழங்கிய மிகச் சிறந்த நிகழ்வாகவே கருதப்படுகிறது. அவரது ரௌத்திரம் , உணர்ச்சிப்பூர்வமான அன்பு மற்றும் திரைமேடையில் அவரது நம்பிக்கையான உலாவல் அனைத்தும் இந்த ட்ரைலரில் நமக்கு அறிமுகமாகின்றன. இது திரையில் அவர் தரவுள்ள பெரிய விருந்து என்னும் அடையாளமாக அமைகிறது.

கவுதம் அவர்களின் தனித்துவத்தையும் , கதை சொல்லும் மென்மையையும் மிகச் சிறந்த உணர்வுகளுடன் இணைத்து வழங்கியுள்ளார். எடிட்டர் நவீன் நூலி அவர்களின் கூர்மையான எடிட்டிங் வேலை ட்ரைலரை மேலும் வலுப்படுத்தி, பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே “அண்ணா அந்தனே”, “இதயம் உள்ளே வா” போன்ற ஹிட் பாடல்களை வழங்கிய அனிருத், இந்தப் படத்திலும் தனது பாக்ஸ்கிரவுண்ட் ஸ்கோரை வைத்து ஒவ்வொரு காட்சியையும் பறக்க வைக்கிறார். கதையின் உணர்வுகளுக்கும், ஓட்டங்களுக்கும் இசை வழிகாட்டியாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு – ஜோமன் T. ஜான் மற்றும் கிரிஷ் கங்காதரன்
படத்தொகுப்பு – நவீன் நூலி

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் என்ற மூன்று நிறுவனங்களின் சார்பில், நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர்.

ஜூலை 31 – வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ஒரு மாஸ் பிளாக்பஸ்டர் பிறக்கப்போவது உறுதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img