spot_img
HomeNewsமிராய் படத்தின் முதல் பாடல் 'வைப் இருக்கு பேபி..' வெளியீடு

மிராய் படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய் ‘ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஹனுமான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா-  ‘சூப்பர் யோதா’வாக நடிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ பாடலுக்கான ப்ரோமோ வெளியாகி பரபரப்பையும், உற்சாகத்தையும் உண்டாக்கியது. தற்போது இந்த பாடலின் முழு லிரிக்கல் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘ வைப் இருக்கு பேபி’ என்ற பாடல் புயல் போல் ரசிகர்களை தாக்கி வருகிறது. இப்பாடலின் இசை.. உற்சாகத்தையும், துடிப்பான ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பாடலில் சாக்ஸபோன், டிரம்ஸ் போன்ற இசை கருவிகளின் இனிய ஓசைகளால் நிறைந்துள்ளது. இந்தப் பாடல் கொண்டாட்டமான ஒரு சூழலையும் உருவாக்குகிறது. பாடலாசிரியர்  டி. மோகன் குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு… கதாநாயகனின் துடிப்பான காதல் உணர்வுகளை  வெளிப்படுத்தி இருப்பதுடன், பெண்ணின் வசீகர அழகையும் காட்சிப்படுத்தியிருக்கிறது.

தேஜா சஜ்ஜா ஒவ்வொரு காட்சியிலும் மின்சாரத்தைப் போல் பிரகாசமான ஆற்றலை வெளிப்படுத்துகிறார். அவரது வசீகரமான தோற்றம் மற்றும் எளிய துள்ளலான நடன அசைவுகளால் திரையை அதிர செய்கிறார். அவரது துல்லியம்- தாராளம்- தாளலயம் – என ஒவ்வொரு ரிதமும் இயல்பாக பிரதிபலிக்கிறது.

பின்னணி பாடகர் சாய் சரண் பாஸ்கரூணி இந்தப் பாடலை தன்னுடைய இனிய குரலால் மெருகேற்றுகிறார். அவருடைய காந்த குரலில் இந்தப் பாடல் மேலும் துள்ளலாகவும், உற்சாகமான தொனி மற்றும் உணர்வின் மையத்துடனும் பொருந்துகின்றன.

இப்பாடலுக்கான திரை மொழி-  ஒளிரும் கட்டிடக்கலை கூறுகள் மற்றும் நவீன பாணியால் மேம்படுத்தப்பட்ட ஒரு நேர்த்தியான-  பகட்டான நகரத்தின் பின்னணியில் அமைந்திருக்கிறது. தேஜா சஜ்ஜா மற்றும் ரித்திகா நாயக்கின் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி காட்சிகளை உயிர்ப்புள்ளதாக்குகிறது. இந்த இருவரின் அழகான நடன அசைவு மற்றும் வசீகரம்.. அவர்களை ஆளுமை மிக்க கவர்ச்சிகரமான திரை ஜோடியாக மாற்றுகின்றன. பாடல் வரிகளில் இடம்பெறுவதை போல் அவர்கள் உண்மையிலேயே வெற்றிகரமான ஜோடியாக தோன்றுகிறார்கள். தேஜா சஜ்ஜா மிகவும் ஸ்டைலிஷ்ஷாக தோன்றினாலும்.. ரித்திகாவும் கவர்ச்சியாக மிளிர்கிறார்.

சமகால அழகியலை நுட்பமாகவும்,  பாரம்பரியமும் கலந்த ‘வைப் இருக்கு பேபி..’ பாடல்- கலக்கலான மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை அளிக்கிறது. இந்தப் பாடல் விரைவில் அனைத்து இசை சார்ந்த தளங்களிலும் முதலிடத்தை பிடிக்கும்.

‘மிராய்’ படத்தில் மனோஜ் மஞ்சு ஒரு சக்தி வாய்ந்த வில்லனாக நடிக்கிறார். இவருடன் ஷ்ரியா சரண், ஜெயராம் , ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி ‘மிராய்’ படத்தை இயக்குவதுடன் ஒளிப்பதிவாளராகவும் தன் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறார். படத்தின் திரைக்கதையை கார்த்திக் கட்டமனேனி வடிவமைத்துள்ளார். மணி பாபு கரணம் எழுத்து மற்றும் வசனங்களில் பங்களிப்பு செய்திருக்கிறார்.

கலை இயக்குநர் ஸ்ரீ நாகேந்திர தங்கலா-  ‘மிராய் ‘படத்திற்கான கற்பனை உலகத்தை காட்சி ரீதியாக‌ செழிப்பாகவும், நேர்த்தியாகவும், விரிவாகவும் உருவாக்கி இருக்கிறார். இப்படத்திற்கு சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.‌

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் எட்டு மொழிகளில் ‘மிராய்’ வெளியாகிறது. மேலும் இந்தத் திரைப்படம் 2D மற்றும் 3 D தொழில்நுட்பங்களில் வெளியாகிறது.

நடிகர்கள் :


‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா , மனோஜ் மஞ்சு , ரித்திகா நாயக், ஷ்ரியா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு.தொழில்நுட்பக் குழு :

இயக்குநர் : கார்த்திக் கட்டமனேனி
தயாரிப்பாளர்கள் : டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத்
தயாரிப்பு நிறுவனம் : பீப்பிள் மீடியா ஃபேக்டரி
நிர்வாகத் தயாரிப்பாளர் : சுஜித் குமார் கொல்லி
இசை : கௌரா ஹரி
கலை இயக்குநர் : ஸ்ரீ நாகேந்திர தங்கலா
எழுத்து : மணி பாபு கரணம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img