தர்ஷன் , காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் மற்றும் பலர் நடிப்பில் வெளி வர இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. படம் என்ன சொல்ல வருகிறது ?
சொந்த வீடு இருந்தால் தான் கல்யாணம் என்று சொன்ன காதலியின் அப்பனுக்காக பழைய அப்பார்ட்மெண்ட்டை வாங்கும் நாயகன் காதலியின் அப்பனிடம் பெண் கேட்கும் போது தர மறுக்குகிறார். விளைவு ரிஜிஸ்டர் மேரேஜ். சொந்த வீட்டில் வாழ்க்கையை தொடங்க, அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சனை. வித்தியாசமான நிகழ்வுகள், எதிர்மறையான சம்பவங்கள் என பல விஷயங்கள் நடைபெற, காரணம் என்ன ? விடை சொல்கிறது ஹவுஸ் மேட்ஸ்
படம் ஆரம்பித்த 15 வது நிமிடத்தில் கதைக்குள் செல்கிறார் இயக்குனர். ஓ இது வழக்கம்போல் ஒரு பேய் கதை தான். இன்று நாம் படத்திற்குள் நுழைய யார் பேய் என்று தெரியாமல் நம்மை இயக்குனர் குழப்ப, பிறகு இது பேய் இல்லை என்று சொல்லி அதற்கான ஒரு விஞ்ஞான காரணத்தை சொல்ல நமக்கு பிடித்து விடுகிறது பைத்தியம்.
2012ல் இருக்கும் காளி வெங்கட் குடும்பம், நாயகன் வசிக்கும் அதே பிளாட்டில் குடியிருக்கிறார். நாயகன் 2022ல் அங்கு குடி வருகிறார். இரு குடும்பமும் எழுத்து மூலமாக தங்கள் பிரச்சனைகளை கூற 2022 காலகட்டமும் 2012 காலகட்டமும் ஒரே நேர்கோட்டில் எப்படி செல்கிறது என்பதை ஒரு மின்னலை வைத்து கூறி நமக்கு ஷாக் அடிக்க வைக்கிறார் இயக்குனர்.
நடந்து முடிந்த விஷயமும் நடந்து கொண்டிருக்கிற விஷயமும் ஒரே நேர்கோட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்த அந்தப் பிரச்சினையை சரி செய்ய நாயகனும் காளி வெங்கட்டும் நேரடியாக சந்தித்தால் தான் பிரச்சனை தீரும் என்பதால் 2012ல் காளிவெங்கட் நாயகனை தேட, 2022ல் நாயகன் காளி வெங்கடேட்டை தேட, இருவரும் சந்தித்துக் கொள்ள அந்த சந்திப்பில் காளி வெங்கட்டுக்கு எதுவும் புரியாமல் இருக்க, “அ ப்.ப ப்ப “குழப்பத்திற்கு விஞ்ஞான பெயரை வைக்க, நமக்கு அது புரியாமல் தவிக்க, 2012ல் நடந்து முடிந்த விஷயத்தை 2022ல் அதை தடுக்க, டைம் மெஷின் கதையை “டைமிங்” இல்லாமல் தந்திருக்கிறார் இயக்குனர் வழக்கமான ஒரு பேய் கதையை விஞ்ஞானத்தின் பெயரில் நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர்.
ரேட்டிங் :- 2/5
தொழில் நுட்ப குழு
எழுத்து இயக்கம் – T. ராஜவேல்
ஒளிப்பதிவு :- M.S. சதீஷ்
இசை – ராஜேஷ் முருகேசன்
எடிட்டர் :- A.நிஷார் ஷரேஃப்
கலை :- N.K. ராகுல் B.F.A
ஒலி வடிவமைப்பு: ஹரிஷ் / K.T.K. சங்கர் (டோன்கிராஃப்ட்)
சண்டைக்காட்சி: தினேஷ் காசி
நடன இயக்குநர்: அசார்
ஆடை வடிவமைப்பாளர்: நந்தினி நெடுமாறன்.
பாடல் வரிகள்: மோகன் ராஜன், உமா
தேவி.
ஒப்பனை: ஷேக் பாஷா
VFX: பீ ஸ்டுடியோஸ்
DI: இன்ஃபினிட்டி மீடியா
கலரிஸ்ட் : M.சண்முகபாண்டியன்
ஸ்டில்ஸ் : R.மனோகர்
விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: R.சேதுராஜ்
திட்ட மேலாளர் – ஜெ.திவாகர்
இயக்க மேலாளர் – ஏ.ஆர்.கார்த்திக்
மார்க்கெட்டிங் மற்றும் புரமோசன் – ரகுல் பரசுராம்
நிர்வாகத் தயாரிப்பாளர்: பிரவீன் K.P.
சாமி
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: S.பி.சக்திவேல்
இணைத் தயாரிப்பாளர்- கலையரசு
தயாரிப்பாளர்: சிவகார்த்திகேயன் – எஸ்.விஜய பிரகாஷ்
தயாரிப்பு நிறுவனம் : Sivakarthikeyan Productions, Play smith studios & South Studios.
மக்கள் தொடர்பு :சுரேஷ்சந்திரா, திரு