spot_img
HomeNewsதேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

 

பல வெற்றிப்படங்களை தயாரித்தும், விநியோகித்தும் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுபாளர்கள் பல புது முகங்களை அறிமுகம் செய்த பெருமை JSK நிறுவனத்தையே சாரும். குறிப்பாக, தேசிய விருது வென்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் போன்ற படங்களை தயாரித்துள்ளது JSK நிறுவனம்.

இந்த நிறுவனம் சார்பாக தற்போது, 2023ம் ஆண்டு தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (28/07/2025) முதல் துவங்குகிறது.

‘புதுமைப்பித்தன்’, ‘லவ்லி’ படங்களை இயக்கி, ‘அநீதி’, ‘தலைமை செயலகம்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.கே.ஜீவா இப்படத்தை இயக்குகிறார்.

தயாரிப்பாளரக மட்டுமல்லாமல், நடிகராகவும் மக்கள் மத்தியில் பரிட்சியமானவர் ஜெ.எஸ்.கே. தரமணி, பேரன்பு, கபடதாரி, அநீதி, ப்ரெண்ட்ஷிப், வாழை போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘ஃபயர்’ படத்தில் இயக்குனராகவும் களம்கண்டார். அப்படத்தில் தானே முதன்மை பாதிரத்தில் நடித்து மிகப்பெரும் வெற்றியை கண்டார் ஜே.எஸ்.கே.

இதனைத் தொடர்ந்து குற்றம் கடிதல்-2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதையானது, ஒரு ஓய்வு பேரும் தருவாயிலுள்ள 60 வயது நிரம்பிய பள்ளி ஆசிரியருக்கு மத்திய அரசாங்கம் “நல்லாசிரியர்” விருதை அறிவிக்கிறது. அதனைத் தொடர்ந்து, அவர் வாழ்கையில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெறுகிறது. இச்சம்பவங்களை எவ்வாறு எதிர் கொள்கிறார்? அந்த சம்பவம் என்ன? என்பது போன்ற அடுக்கடுகான திருப்பங்களுடன் அனைவர் மனதிலும் பதியும் வகையில் ஒரு வலுவான கிளைமாக்ஸ் காட்சியுடன் இப்படம் இருக்கும்.

படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடங்களின் விவரங்கள் தமிழகமெங்கும் பல பகுதிகளிலும், கேரளாவிலும் நடத்தப்படவுள்ளது.

இப்படத்தின் கிளிம்ப்ஸை இன்று (28.07.2025) படக்குழு வெளியிட்டுள்ளது.

லிங்க் : https://youtu.be/dY5JuAZy61s?si=DFSatJDMPTUZy80H

இப்படத்தின் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள்,

படத்தின் வகை – த்ரில்லர் டிராமா

நடிகர்கள் விவரம்,

ஜேஎஸ்கே, பாண்டியராஜன், அப்பு குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், P.L.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திர சேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் ரோஷன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – ஜேஎஸ்கே. சதீஷ் குமார்
எழுத்து & இயக்கம் – எஸ்.கே.ஜீவா
திரைக்கதை – எஸ்.கே.ஜீவா & ஜே.எஸ்.கே
இசை – டி.கே
படத்தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார்
ஒளிப்பதிவு – சதீஷ்.ஜி
சண்டை பயிற்சி மாஸ்டர் – மகேஷ் மேத்யூ
நடனம் – மானஸ்
பாடலாசிரியர் – ராஜா குருசாமி
தயாரிப்பு நிர்வாகி – ப.ஆறுமுகம்
வடிவமைப்புகள் – சிந்து கிராஃபிக்ஸ் – பவன்குமார் ஜி
சுவரொட்டிகள் – நந்தா
வண்ணக்கலைஞர் – ஆர்.நந்தகுமார்
DI & VFX – வர்ணா டிஜிட்டல் ஸ்டுடியோ
ஆடியோகிராபி – ராஜா நல்லையா
மக்கள் தொடர்பு – ரேகா (Raan T Art)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img