விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கிங்டம்” திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியுள்ளது.
விழாவில் விஜய் தேவராகொண்டா கூறியது:
“என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்.
இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை நினைவூட்டினார். ஆரம்பத்திலிருந்தே, இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாசாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன.
இந்தப் படம் உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று , அது ரஜினிகாந்த் சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் படத்திற்கான பிரமோஷன்கள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து பிரமோட் செய்வதென்றால், அது சென்னை மட்டுமே! எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் .
சூர்யா அண்ணா செய்த உதவிக்கு நன்றி. “நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணும்… இல்லன்னா பரவாயில்லை” என்று தயங்கி கேட்டேன். ஆனால் அவர் எந்த தயக்கமுமின்றி டீசருக்காக தனது சக்திவாய்ந்த குரலை கொடுத்து உதவினார். அதனால் கிங்டத்தின் தாக்கம் வெளியே வருவதற்கே முன்பே உருவானது.
அனிருத் இந்த படத்தின் இசையில் தனது உயிரையும் மனதையும் ஊற்றியுள்ளார். நேற்று ப்ரீ-ரிலீஸ் இவெண்டில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், இன்று சென்னை வந்து படம் ஓவர்சீஸ் காப்பிக்காக இறுதி பணிகளை பார்வையிடுகிறார்.நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்!
அனிருத் படத்தின் 40 நிமிஷத்தையே பாராட்ட, ரசிகர்கள் படம் மீது நம்பிக்கையுடன் நின்றார்கள். என் வார்த்தைகளை எல்லோரும் நம்ப மாட்டாங்க, ஆனா அனிருத் சொன்னா நம்புவாங்க. அந்த அளவுக்கு அவருக்கு விசுவாசம் இருக்கு.
படம் முழுவதும் வித்தியாசமான சினிமாட்டோகிராபி இருக்கு – கிரீஷ் கங்காதரன் படம் முழுவதிலிருந்தும் 40% வேலை செய்தார், பின் அவர் ‘கூலி’ படத்துக்காக சென்றுவிட்டார். மீதியை ஜோமோன் சுட்டுள்ளார்.
இந்த கதாபாத்திரத்துக்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஒரு மாற்றத்துக்காக தலையில் இருந்து மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். பின்னர் பெரிய மாற்றம்.
விரைவில் ஒரு முழு நீள போலீஸ் கதாபாத்திரம் செய்வதற்கும் நிச்சயமாக ஆர்வமிருக்கிறது.
நான் ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது, ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நண்பர்கள் என்னை ஒரு குடும்ப உறவினராகவே பார்க்கிறீர்கள். இது எனக்கு மிகுந்த நெகுழ்ச்சியை தருகிறது.”
விழா முடிந்ததும், விஜய் தேவராகொண்டா ஊடக நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்து, அன்பும் நன்றியும் தெரிவித்து, அனைவரோடும் நெருக்கமாக பழகினார்.
ஜூலை 31, 2025, அன்று வெளியாகவுள்ள “கிங்டம்”, அதிரடி மற்றும் உணர்வுகளின் மாபெரும் கலவை. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும். இப்படம், சிறந்த தொழில்நுட்பக் குழுவால் உருவாக்கப்பட்டு, திரையரங்கில் விருந்தாக அமையும்.
தொழில்நுட்பக் குழு:
இசை: அனிருத்
ஒளிப்பதிவாளர்கள்: ஜோமோன் T ஜான் ISC & கிரீஷ் கங்காதரன் ISC
தொகுப்பு: நவீன் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவிநாஷ் கொல்லா
ஆடை வடிவமைப்பாளர்: நீரஜா கோனா
பாடல் வரிகள்: சூப்பர் சுப்பு & விஷ்ணு எடவன்
வசனங்கள்: கே.என். விஜயகுமார்
நடன இயக்குநர்: விஜய் பின்னி
ஸ்டண்ட் இயக்குனர்: யானிக் பென், சேதன் D’சூசா & ரியல் சதீஷ்
கலர் கிரேடிங்: ரங்கா
ஒலி வடிவமைப்பு: Sync சினிமா
ஆடியோகிராபி: விநய் ஸ்ரீதர்
VFX மேற்பார்வையாளர்: வசுதேவ ராவ் எம்
PRO : சுரேஷ் சந்திரா – அப்துல் நசார்