உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா கலக்கேரி, சாண்டிகா, பவன், தயா பன்னீர்செல்வம், ஸ்ரீதர் நடிக்க பிரபு ஸ்ரீனிவாஸ், இயக்கத்தில் வந்திருக்கும் படம் அக்யூஸ்ட். கதை என்ன சொல்ல வருகிறது ?
சட்டத்திற்கு எதிரான செயல்களை மட்டும் செய்து கொண்டிருக்கும் நாயகன் ஒரு கொலை குற்றத்திற்காக கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் போது அவரை கொலை செய்ய ஒரு கூட்டம் தொடர்கிறது. அவருக்கு பாதுகாப்பாக செல்லும் காவலர் அஜ்மல் எப்படி அவரை காப்பாற்றி கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார். அவரை கொலை செய்ய முற்படும் கூட்டத்தின் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள.. பாருங்கள் அக்யூஸ்ட்..
படம் முழுக்க கணக்கு என்ற கொலை குற்றவாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் உதயாவின் நடிப்பில் துள்ளல் இருந்தாலும். அவரிடம் ஒரு எதார்த்தமான நடிப்பு இல்லை. செயற்கை தனம் தான் தெரிகிறது.
வேந்தன் எனும் காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜ்மல் பல இடங்களில் மிகையான நடிப்பால் கடுப்பேத்துகிறார். ஆனாலும் காதலியுடன் கைபேசியில் கொஞ்சம் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.
மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஜான்விகா அழகாக இருந்தாலும்.. இளமையுடன் இருந்தாலும்.. கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
ராம நாயுடு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு திரைக்கதைக்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும்.. சில இடங்களில் அவர் உதிர்க்கும் ‘ஒன் லைனர்கள்’ ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் – இசையமைப்பாளர் – படத்தொகுப்பாளர் – படத்தை ஓரளவுக்கு தாங்கி இருக்கிறார்கள்.
நான்லீனியர் பாணியில் திரைக்கதை விவரிக்கப்பட்டிருந்தாலும்… எதிர்பாராத திருப்பங்கள் இருந்தாலும்… கதாபாத்திரங்களும் , அவர்களின் செயற்கையான நடிப்பும்.. ரசிகர்களை வதைக்கிறது. இறுதிக்காட்சியில் நமக்கு சொல்லப்படும் சஸ்பென்ஸ் படம் பாத்த நாம் அனைவரும் எதிர்பார்த்த சஸ்பென்ஸ். அதனால் நமக்கு எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லை. கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை தொய்வினால் படத்தின் ஓட்டம் கொஞ்சம் தடைபடுகிறது..
ரேட்டிங் ; 2/5