போகி – பழைய குப்பைகளை எரித்து புது வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கும் பொங்கலுக்கு முந்தைய நாள். ஆனால் இந்த போகி படம் சமூக விரோத குப்பைகளை எரித்து புதிய உலகம் படைக்கும் புது முயற்சி. படம் என்ன சொல்ல வருகிறது ?
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மிகப்பெரிய கும்பலை தகுந்த ஆதாரங்களுடன் பிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபடுகிறது.. மறுபக்கம் அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடிப்பிடித்து நாயகன் நபி நந்தியும், சரத்தும் கொலை செய்கிறார்கள். இதற்கிடையே, சிறுவயதில் பிரிந்து சென்ற தோழியை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் நாயகன் அவர் மீதான தனது காதலை வெளிப்படுத்த முடியாமல், தனது கொலை வெறிப் பயணத்தை தொடர்கிறார்.. நாயகன் நபி நந்திக்கும் இந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு ? என்பதே மீதி கதை.
அறிமுக நடிகர் என்றாலும் முதல் படம் போல் தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் நாயகன் நபி நந்தி ‘லப்பர் பந்து’ புகழ் சுவாசிகா, இளமையாக இருக்கிறார். பல போராட்டங்களை கடந்து படித்து முன்னேறும் பழங்குடி இன பெண்களை பிரதிபலித்திருப்பவர், பெண்களின் உடல் ரீதியான மற்றும் மன போராட்டங்களை தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களை கலங்க வைத்து விடுகிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில், வித்தியாசமான லுக்கில் நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், அவர்களுக்கு ஒரே ஒரு காட்சி. அனைத்து நடிகர்களும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்து இருக்கிறார்கள்.
சமுதாயத்துக்கு ஏற்ற ஒரு நல்ல கதையை சிறந்த திரைக்கதை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கலாம். ஆனால் திரைக்கதையில் குழப்பங்களும் தெளிவில்லாமல் இருப்பதால் படத்தின் ஓட்டம் தடைபடுகிறது. ஒரு சிறந்த முயற்சிக்கு நமது வாழ்த்துக்கள்.
ரேட்டிங் ; 2/5