திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் எலக்சனை முன்னிட்டு தனது துப்பாக்கியை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க அதை தன் பொறுப்பில் வைத்திருக்கும் தலைமை காவலர் லால் தொலைத்து விடுகிறார். எலக்சன் முடிந்தவுடன் துப்பாக்கி மன்சூர் அலிகானிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு நாலு நாள் இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மாவட்ட செயலாளர் தன் அடியாள் மூலம் தொகுதிக்கு 10 கோடி பணம் அனுப்ப, அந்த பணத்தை போலீஸ்காரன் மூலம் ஒப்படைக்க நினைக்கும் அடியாள், பணத்தை இன்ஸ்பெக்டர் இடம் அவர் ஒப்படைக்கும் நேரத்தில் வண்டி விபத்துக்குள்ளாகிறது. பணம் எங்கே போனது என்று தெரியவில்லை. ஒரு பக்கம் துப்பாக்கியை தேட வேண்டும். இன்னொரு பக்கம் 10 கோடி பணத்தை தேட வேண்டும். முடிவு என்ன ? இதுவே சரண்டர் படத்தின் கதை.
பயிற்சி பெறும் உதவி காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தர்ஷன் தியாகராஜா – போலிஸ் சீருடையில் பொருத்தமாக தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். எக்சன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். எம்மை தமிழ் சினிமா நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் நிரூபித்திருக்கிறார்.
லால், தர்ஷன் தியாகராஜா ஆகியோரைக் கடந்து வில்லனாக நடித்திருக்கும் சுஜித் சங்கரும், அவருடைய தம்பியாக நடித்திருக்கும் கௌஷிக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் – இசையமைப்பாளர் – படத்தொகுப்பாளர் – தங்களுடைய பங்களிப்பை நிறைவாக செய்து, ரசிகர்களுக்கு அற்புதமான பட வழங்குகிறார்கள்.
ஈரம் மற்றும் பல வெற்றிப் படங்களை இயக்கிய அறிவழகனின் உதவியாளர் தான் இந்தப்படத்தின் இயக்குனர் கவுதம் கணபதி.. குருவை மிஞ்சிய சிஷ்யன் போல் ஒரு சிறு விஷயத்தை வைத்துக்கொண்டு படம் முழுவதும் விறுவிறுப்புடன் பரபரப்புடன் எடுத்து சென்று இறுதி காட்சியில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். காவலராக பணியாற்றுபவர்கள் தங்கள் கண்முன் சட்டத்தை மீறிய செயல் நடைபெற்றாலும்… அதனை கண்டிக்க முடியாமலும், தண்டிக்க முடியாமலும் உயரதிகாரிகளின் நடவடிக்கையை கண்டு ஆத்திரப்படும் போதும்.. அதற்காக அவமானப்படும் போதும் … காவலர்களின் மன உணர்வு எப்படி இருக்கும் என்பதை பார்வையாளர்களுக்கு துல்லியமாக கடத்தியிருக்கிறார். எதிர்காலத்தில் பல முன்னணி கதாநாயகர்கள் இவரின் படத்தில் நடிக்க காத்திருக்கின்ற சூழ்நிலை வரலாம். வாழ்த்துக்கள்.
ரேட்டிங் – 4 / 5