பான்-இந்தியா பாப் கலாச்சார நிகழ்வான இதன் டிக்கெட்டுகள் KYN -இல் பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது…இப்போதே உங்கள் டிக்கெட்டிற்கான முன்பதிவை தொடங்குங்கள்!
சென்னை, இந்தியா- ஆகஸ்ட் 04, 2025: தி ப்ரீமியர் குளோபல் ஐபி மற்றும் கம்யூனிட்டி பில்டரான ஸ்கைஸ்போர்ட்ஸ், ஆகஸ்ட் 30-31 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில், பான்-இந்தியா ஃபெஸ்டிவல் சீரிஸான புத்தம் புதிய கேமிங் திருவிழாவை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறது. இந்த இரண்டு நாள் கொண்டாட்டம் ஸ்கைஸ்போர்ட்ஸ் கேமிங் முயற்சியின் முதல் அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது சென்னையின் துடிப்பான ரசிகர்களைக் கவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிக்கெட்டுகள் KYN செயலியில் மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கும்.
பல கலாச்சாரங்களின் அனுபவமான இந்த கேமிங் திருவிழாவின் சிறப்பம்சங்கள்:
* திறந்த லேன் ( LAN ) போட்டிகளில் கேமிங் மற்றும் காஸ்ப்ளே.
* இந்திய காமிக்ஸுடன் அனிமேஷன் ஒன்றிணைகிறது.
* நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் ரசிகர்களுடன் கிரியேட்டர்ஸ் கலந்துரையாடுகிறார்கள்
* புனேவில் நடைபெறும் தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்கு முன்பாக 16 வயதுக்குட்பட்ட செஸ் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு அவர்களில் சிறந்தவர்களுக்கு மகுடம் சூட்டப்படும்.
ஸ்கைஸ்போர்ட்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சிவா நந்தி, “சென்னையில்தான் ஸ்கைஸ்போர்ட்ஸ் உருவானது. மேலும் எங்கள் தலைமையகம் இங்கு இருப்பதால் உள்ளூர் கலாச்சாரத்துடன் எங்களை நெருக்கமாக இணைக்கிறது. கேமிங் திருவிழாவில் நகரத்தின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதன் மூலம் எங்கள் சொந்த மண்ணில் உலகத்தரம் வாய்ந்த பாப் கலாச்சார அனுபவத்தை கொடுக்கிறோம். இந்தத் திருவிழாவுக்கு வரும் ஒவ்வொரு ரசிகரும் இந்த விழா சென்னைக்காக மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது என்று உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.
“வலுவான சமூகங்களை வளர்க்கும் அதே வேளையில், வேறுபட்ட அனுபவங்களையும் புதிய பொழுதுபோக்கையும் வழங்கும் ஒரே இடமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் தொலைநோக்குப் பார்வை. இந்த தொலைநோக்குப் பார்வை, கேமிங் திருவிழா மூலம் ஸ்கைஸ்போர்ட்ஸ் உருவாக்கும் விஷயங்களுடன் சரியாக ஒத்துப்போகிறது ” என்று Kynhood Technologies இன் தலைமை செயல் அதிகாரி மற்றும் KYN இன் நிறுவனர் காயத்ரி தியாகராஜன் கூறினார்.
விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அதிகமுள்ள இடம் என்பதால் ஸ்கைஸ்போர்ட்ஸ் சென்னையை தேர்வு செய்தது. தற்பொழுது, இந்தியாவில் 450 மில்லியன் கேமர்கள் உள்ளனர். இதுமட்டுமல்லாது காமிக்ஸ், அனிமே மற்றும் பொழுதுபோக்கு துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உள்ளனர்.
ஸ்கைஸ்போர்ட்ஸ் பற்றி:
இ- ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட குளோபல் ஐபி பில்டர். அர்ப்பணிப்புள்ள கேமர்கள் மற்றும் முன்னாள் தொழில்முறை வீரர்களால் இயங்கும் இந்த நிறுவனம் கம்யூனிட்டி பில்டிங், ஐபி கிரியேஷன் மற்றும் டெக் தீர்வு போன்ற சேவைகளை கேமர்ஸ், இ-ஸ்போர்ட்ஸ் பிளேயர்ஸ் மற்றும் பிராண்டுகளுக்குக் கொடுத்து வருகிறது. ஸ்கைஸ்போர்ட்ஸ் உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்துவதன் மூலமும், துடிப்பான கேமிங் சமூகத்தை வளர்க்கிறது மற்றும் உலகளாவிய இ-ஸ்போர்ஸில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்கைஸ்போர்ட்ஸ், டிஜிட்டல் பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ஜெட்சின்தசிஸின் ஒரு பகுதியாகும். மேலும் தகவலுக்கு: https://skyesports.in/