வார் 2 படத்திற்காக கஜ்ரா ரே மற்றும் தூம் 3 போன்ற பாடல் வெளியீட்டு யுக்தியை மீண்டும் கொண்டு வருகிறார் ஆதித்யா சோப்ரா ! ஹ்ரித்திக், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடனமாடியுள்ள இந்த முழு பாடல் காட்சியை வார் 2 ரிலீஸுக்கு முன் வெளியிடாமல் அதை பெரிய திரையில் ரசிகர்கள் கொண்டாட பாதுகாக்கிறார்!
கடந்த 30 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் மிகப்பெரிய படங்களை தயாரிக்கும் போது பல புதுமையான யுக்திகளை செயல்படுத்துவதில் பிரபலமானவர் ஆதித்யா சோப்ரா . இப்போது அவர் வார் 2 படத்திற்காக பண்டி ஆர் பப்லி படத்தில் இடம்பெற்ற கஜ்ரா ரே பாடல் மற்றும் தூம் 3 படத்தில் இடம்பெற்ற கம்லி பாடல் வெளியீட்டு யுக்தியை மீண்டும் பயன்படுத்துகிறார்.
வார் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடனமாடியுள்ள இந்த பாடலை சிறு க்ளிம்ஸ் வீடியோவாக மட்டுமே இந்த வாரத்தில் யஷ் ராஜ் பிலிம்ஸ் வெளியிடுகின்றனர். ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆர் நிகழ்த்தியுள்ள இந்த பிரமிக்கும் நடனத்தை பெரிய திரையில்தான் பார்வையாளர்கள் அனுபவிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் முழுப் பாடலை வெளியிடாமல் வைத்திருக்கின்றனர்.
மேலும், சினிமா வட்டாரத்தில் இது குறித்து கூறியதாவது,”வார் 2 இந்தாண்டில் வெளியாகும் மிகப்பெரிய படம். இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடனமாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை ஆதித்யா சோப்ரா நன்றாக புரிந்து கொண்டுள்ளார்.அவர் இந்த பாடலுக்கான பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் உருவாக்க விரும்புகிறார். அதனால் முழுப் பாடலை இப்போது வெளியிடாமல் உள்ளார் . மக்கள் திரையரங்குகளுக்கு வந்து, பெரிய திரையில் ஹ்ரித்திக் & ஜூனியர் என்டிஆர் இருவரையும் ஒரே பாடலில் காணும் இந்த அனுபவத்தை திரையில் அனுபவிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். பண்டி ஆர் பப்லி படத்தில் இடம்பெற்ற கஜ்ரா ரே பாடலை ரிலீஸுக்கு முன் வெளியிடவில்லை. படம் வெளியாகியதும், ரசிகர்கள் அதனை திரையரங்குகளில் பார்த்து மெய்மறந்தனர். தூம் 3 படத்தின் எல்லா பாடல்களையும் ரகசியமாக வைத்திருந்தார். அந்த படம் திரையரங்குகளில் வெளியானதும் கம்லி பாடல் வைரலானது.”
மேலும் கூறுகையில்,” இப்போது ஹ்ரித்திக், ஜூனியர் என்டிஆர் இணைந்துள்ள இந்த பாடல் அவருக்கு ஒரு பொக்கிஷம் போல் உள்ளது. அதனால் இதை அவர் எளிதாக வெளியிட மாட்டார்.மக்கள் திரையரங்குகளுக்கு வரவேண்டும், மீண்டும் மீண்டும் அந்த பாடலை திரையில் அனுபவிக்க வரவேண்டும். ஏனெனில் அது இணையத்தில் எங்கேயும் இருக்காது.வார் 2 படத்திற்கான வசூல் மற்றும் டிக்கெட் விற்பனையை மிக முக்கியமாக எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப அவர் இந்த யுக்தியை பயன்படுத்துகிறார்.”
அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ந் தேதியன்று ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.