spot_img
HomeCinema Reviewநாளை நமதே - திரைப்பட விமர்சனம்

நாளை நமதே – திரைப்பட விமர்சனம்

 

பொதுவான பாராட்டு ; சாதி, அரசியல், சமூக நீதியைக் கேள்விக்குள்ளாக்கும் உரத்த குரலாக உருவெடுத்திருக்கிறது ‘நாளை நமதே’. உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு, இடஒதுக்கீட்டின் அர்த்தத்தையும், அதன் எதிர்ப்புகளையும் யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது.

நடிப்பு ; மதுமிதா கதாநாயகியாக தனது கதாபாத்திரத்தை உணர்ச்சிபூர்வமாக, உற்சாகமாக ஆற்றியுள்ளார். அவரது செயல்பாடுகள், எதிர்ப்பை தாண்டி வெற்றியை நோக்கி செல்லும் முயற்சிகள், ரசிகர்களுக்கு நம்பிக்கையை தூண்டும் வகையில் இருக்கின்றன. மற்ற நடிகர்களும் வாழ்ந்தது போல நடித்துள்ளனர்.

இயக்கம் மற்றும் எழுத்து ; வெண்பா கதிரேசன். தைரியமாக சமூக, அரசியல் கருத்துகளை வலியுறுத்துகிறார்.. சாதி என்ற உண்மையை வெள்ளிப்படையாக பேசுவதோடு, வலிமை வாய்ந்த வசனங்கள் மூலம். அதிரடியாக சிந்தனை தூண்டும் முயற்சி செய்திருக்கிறார்.

தொழில்நுட்பம் ; ஒளிப்பதிவு, இசை என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் கதையின் உணர்வோட்டத்தோடு ஒத்துப்போகின்றன. பிரவீனின் காட்சிகள் நேரில் நிகழும் உணர்வை கொடுக்கின்றன.. ஹரிகிருஷ்ணனின் இசை, பின்னணி பாடல்களும் சரியான இடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

முடிவுரை ; ‘நாளை நமதே’ என்பது சாதியை தாண்டி, சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் ஒரு முக்கியமான சமூக அரசியல் படம். போராடுபவர்களின் குரலாக இத்திரைப்படம் பேசுகிறது. யோசிக்க வைக்கும், உணர்ச்சி கொண்டு பதிலளிக்கும், நேர்மையான ஒரு படைப்பு..

 

மதிப்பீடு : (4/5)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img