spot_img
HomeNewsயோகி பாபு நடிக்கும் 'சன்னிதானம் (P.O)' படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும்...

யோகி பாபு நடிக்கும் ‘சன்னிதானம் (P.O)’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட இயக்குநர் சேரன் மற்றும் நடிகை மஞ்சு வாரியர்!

 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘சன்னிதானம்(P.O)’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது, ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளது.

‘Tootu Madike’ போன்ற படங்களை தயாரித்த கன்னடாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sarvata Cine Garage மற்றும் ‘Veerappan’, ‘Sooryavamsi’, ‘Vaanku’ (தயாரிப்பு), ‘Nalla Samayam’ (விநியோகம்), ‘Rudhiram’ (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) போன்ற வெற்றி படங்களை தந்த மலையாளத்தின் முன்னணி நிறுவனமான ஷிமோகா கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றன. மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, அமுத சாரதி வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

நட்சத்திரப் பட்டாளத்தை கொண்ட இந்த படத்தில், 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பன்முகத் தமிழ் நடிகரான யோகி பாபு, கன்னட சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், சித்தாரா, பிரமோத் ஷெட்டி, மூணார் ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகோடி, சத்விக், அஷ்வின் ஹாசன், வினோத் சாகர், கல்கி ராஜா, விஷாலினி, தஷ்மிகா லக்ஷ்மண் மற்றும் மது ராவ் உள்ளிட்ட பலரும் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

இத்திரைப்படம், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், பம்பை மற்றும் எருமேலி போன்ற புகழ்பெற்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

வலுவான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டு, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இந்த படத்தின் கதை பேசுகிறது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையுடனும், ஆழமான உணர்வுபூர்வமான தொடர்புகளுடனும், இந்த படம் ஒரு சக்திவாய்ந்த சினிமா பயணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு அய்யப்பன் எழுதியுள்ளார். அருண் ராஜ் இசையமைக்க, வினோத் பாரதி ஒளிப்பதிவையும், பிகே படத்தொகுப்பையும் கையாளுகின்றனர். தொழில்நுட்பக் குழுவில் விஜய் தென்னரசு (கலை இயக்குநர்), மெட்ரோ மகேஷ் (சண்டை பயிற்சி), ஜாய் மதி (நடன அமைப்பு), நடராஜ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் மோகன் ராஜன் (பாடல்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ‘சன்னிதானம்(P.O)’ விரைவில் வெளியாக உள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

நடிகர்கள்:
யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி, சித்தாரா, பிரமோத் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத், மூணார் ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகோடி, சத்விக், அஷ்வின் ஹாசன், வினோத் சாகர், கல்கி ராஜா, விஷாலினி, தஷ்மிகா லக்ஷ்மண், மது ராவ்.

தொழில்நுட்பக் குழுவினர்:
வசனம் மற்றும் இயக்கம்: அமுத சாரதி
கதை மற்றும் திரைக்கதை: அஜினு அய்யப்பன்
தயாரிப்பாளர்கள்: மது ராவ், வி.விவேகானந்தன் மற்றும் ஷபீர் பதான்
தயாரிப்பு நிறுவனம்: சர்வத்தா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ்
ஒளிப்பதிவு: வினோத் பாரதி
இசை: அருண் ராஜ்
படத்தொகுப்பு: பிகே
கலை இயக்குநர்: விஜய் தென்னரசு
இணை இயக்குநர்கள்: ஷாக்கி அசோக் & சுஜேஷ் அன்னி ஈப்பன்
சண்டைப் பயிற்சி: மெட்ரோ மகேஷ்
பாடலாசிரியர்: மோகன் ராஜன்
நடன அமைப்பு: ஜாய் மதி
ஆடை வடிவமைப்பாளர்: நடராஜ்
ஒப்பனை: சி. ஷிபுகுமார்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள்: ரிச்சர்ட் & டி. முருகன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: விலோக் ஷெட்டி
இணை இயக்குநர்கள்: முத்து விஜயன், ராஜா சபாபதி, ராஜா ராம்
உதவி இயக்குநர்கள்: அக்னி மகேந்திரன், சரவணன் ஜீவா
வடிவமைப்பாளர்: வி.எம். சிவகுமார்
ஸ்டில்ஸ்: ரெனி மோன்
மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் K அஹ்மத் & பாரஸ் ரியாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img