spot_img
HomeNewsஜேப்பியர் பொறியியல் கல்லூரி கல்வித்துறையில் பிரம்மாண்டமான தனது 25 ஆவது வருடத்தைக் கொண்டாடுகிறது!

ஜேப்பியர் பொறியியல் கல்லூரி கல்வித்துறையில் பிரம்மாண்டமான தனது 25 ஆவது வருடத்தைக் கொண்டாடுகிறது!

 

பெண்களுக்கான தனி பல்கலைக்கழகம் ஜேப்பியர் நிர்வாகம் கொண்டு வரவிருக்கும் மகிழ்வான செய்தியை சில்வர் ஜூப்ளி வருடத்தை கொண்டாடும் அற்புதமான நிகழ்வில் டாக்டர் ரெஜினா ஜே முரளி பகிர்ந்து கொண்டார்!

சென்னை, ஆகஸ்ட் 12, 2025: கல்வி மற்றும் புதுமைகளுக்குப் பெயர் பெற்ற ஜேப்பியர் பொறியியல் கல்லூரி தனது 25ஆவது வருடம் என்ற மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த நிகழ்வு பிரமாண்டம், தொலைநோக்கு மற்றும் எதிர்காலத்திற்கான திட்டமிடலுடன் நடந்தது. இந்த நிகழ்வில், கல்வித்துறையில் பெயர் பெற்ற நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு ”கல்வித்துறையை மறுவடிவமைப்பு மற்றும் புதுமைகளுக்கான திட்டமிடல்” என்ற தலைப்பில் நடைபெற்றது.

ஜேப்பியர் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் வேந்தரும் ஜேப்பியர் பொறியியல் கல்லூரியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ரெஜினா ஜே முரளி நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு கூறுகையில், “பெண்கள் வளர்ச்சியில் ஆரோக்கியமான முறையில் ஆண்கள் ஊக்கமளிப்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது. இன்று, சுமார் 70 சதவீத மாணவர்கள் பெண்கள் என்பதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். என் தந்தை கல்லூரியை நிறுவியபோது, 100 ஆண்கள் மாணவர்களாக இருந்தனர். பெண்களுக்கு ஒரு தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்பது அவரது கனவு. எங்களது தீவிர முயற்சியால அந்தக் கனவு விரைவில் நிறைவேறும் என உறுதியளிக்கிறோம்” என்றார்.

வேந்தர்கள், துணைவேந்தர்கள், ரெஜிஸ்ட்டர்ஸ், நிர்வாக அறங்காவலர்கள், முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கல்வித் தலைவர்கள், நாடு முழுவதிலுமிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட பிரபல தொழில்துறைத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்தத் தொடக்க நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்து தமிழக கல்வித் துறையில் மதிப்புக்க தருணமாக மாறியது. அதாவது, ஜேப்பியர் பல்கலைக்கழகத்திற்கும் தமிழக அரசின் ஐடிஎன்டி மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் (ஐடிஎன்டி) அசோசியேட் வைஸ் பிரசிடெண்ட் திரு. டேனியல் பிரபாகரன் மற்றும் ஜேப்பியர் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் வேந்தரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் ரெஜினா ஜே முரளி ஆகியோர் முறைப்படுத்தினர். இது தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

காலை நடந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக நிறுவனத்தின் புகழ்பெற்ற பயணத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்புமிக்க வெள்ளி விழா நினைவுப் புத்தகமான ‘25 Years of Legacy – A Journey Through Time’ வெளியிடப்பட்டது. இந்தப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த தலைவர்கள் மற்றும் உடனிருந்த பார்ட்னர்ஸ் அனைவருக்கும் டாக்டர் ரெஜினா ஜே முரளி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அதே நேரத்தில் வருகை தந்திருந்த பிரமுகர்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்திய தனியார் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (CIPU), மெட்ராஸ் வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபை (MCCI) மற்றும் TiE குளோபல் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்த வட்டமேசை மாநாட்டில் தொழில்-கல்வி இடைவெளியைக் குறைத்தல், மாணவர்களை தொழில்துறைக்குத் தயாராக இருக்கச் செய்தல் மற்றும் புதுமை சூழல் அமைப்புகளை வளர்ப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. சரளா பிர்லா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் கோபால் பதக் இந்த அமர்வை திறமையாக நிர்வகித்தார். “தொழில்துறையும் கல்வித்துறையும் ஒன்றிணையும்போது இந்தியா புதுமையில் உலகளாவிய வல்லரசாக உயரும்” என்ற உண்மையை அனைவரும் ஆமோதித்தனர்.

புகழ்பெற்ற இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி இந்த நிகழ்வின் மாலையை அற்புதமான கொண்டாட்டமாக மாற்றி அனைவருக்கும் மறக்க முடியாத தருணத்தை அமைத்து கொடுத்தது.

ஜேப்பியர் பொறியியல் கல்லூரி அதன் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில் நடந்திருக்கும் இந்த வெள்ளி விழா கொண்டாட்டம், மாறிவரும் எதிர்கால உலகத்திற்குத் தயாராக இருக்கும் தலைவர்களை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டு அதன் 25 ஆண்டுகால அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img