சென்னையின் மையப்பகுதியான YMCA மைதானம், நந்தனத்தில் ஆகஸ்ட் 21 முதல் 24, 2025 வரை நடைபெறும் கிராம திருவிழா ‘செம்பொழில்’. தொண்டைமண்டலம் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கும் இந்த விழாவிற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உழவன் அறக்கட்டளை ஆதரவு கொடுக்கிறது. தமிழ் கலாச்சாரம், சுற்றுச்சூழல் அறிவு மற்றும் சமூக மரபுகளின் நான்கு நாள் கொண்டாட்டமான ‘செம்பொழில் – சென்னை ஒரு கிராமத்து திருவிழா’வை வழங்குவதில் பெருமை கொள்கிறது. இந்த விழா பெருநகரத்தின் நடுவில் பாரம்பரியமான நம் தமிழக கிராமங்களின் ஆன்மாவையும் கொண்டாட்டத்தையும் கொண்டு வருகிறது.
விழா நோக்கம்:
செம்பொழில் நிகழ்வில் அனைத்து வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த மக்களும் ஒன்று கூடி, தமிழ் பாரம்பரியத்தை வாழ்ந்து சுவாசிக்க இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாது, நியாயமான வர்த்தகம் மூலம் கைவினைஞர்கள், விவசாயிகளுக்கு நேரடியான ஆதரவை வழங்குதல். அனுபவக் கற்றல் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான வாழ்க்கையை ஊக்குவித்தல் போன்றவை.
இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மக்களின் கலந்துரையாடல் மூலம் அவர்கள் பாடப்புத்தகங்கள் தாண்டிய கற்றலை பெறுவார்கள். பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட கற்றலை பெறுவார்கள். இதனால் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டி ஒன்றாகக் கற்றுக்கொள்வார்கள்.
செம்பொழில் நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்?
* ஐந்தினை நிலப்பரப்புகள்: சூழலியல் கவிதையைச் சந்திக்கும் இடம்
* கலை மற்றும் பாரம்பரியம்
* கைவினை மற்றும் கைவினைஞர் பஜார்
* உணவு மற்றும் விவசாய அரங்கம்
குழந்தைகள் கூடம்:
பயிற்சிகூடங்கள் மற்றும் செயல்விளக்கங்கள், கருப்பொருள் நிறுவல்கள் மற்றும் கண்காட்சிகள்
சூழலுக்கு தீங்கில்லா பொருட்கள்:
தூய்மையான சுற்றுச்சூழலை மனதில் கொண்டு குறைந்த கழிவுகளுடன் கூடிய திருவிழாவாக செம்பொழில் வடிவமைக்கப்பட இருக்கிறது. விழா அலங்காரத்திற்கு இயற்கை பொருட்கள், உணவுக் கடைகளுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கட்லரிகள் மற்றும் குறைந்தபட்ச அச்சிடப்பட்ட பொருட்கள் பயன்படுத்தும். பார்வையாளர்கள் தங்கள் சொந்த தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பைகளை கொண்டு வர ஊக்குவிக்கிறோம்.
அனைவருக்கும் வசதி:
இந்த இடம் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர், குழந்தைகள் மற்றும் அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தரும். பயிற்சி பட்டறைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும். அரசு மற்றும் சிறப்புப் பள்ளிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கற்றல் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்பதை நிகழ்வு உறுதி செய்கிறது.
ஃபெஸ்டிவல் பார்ட்னர்ஸ்:
தொண்டைமண்டலம் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கும் இந்த விழாவிற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உழவன் அறக்கட்டளை ஆதரவு கொடுக்கிறது. பொறுப்பான நுகர்வு, கலாச்சார பாதுகாப்பு, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையை ஊக்குவிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு இது பங்காற்றுகிறது.
செம்பொழில் நிகழ்வு மக்களுக்கானது. குடும்பங்கள், பள்ளிகள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கலைஞர்கள், அறிஞர்கள், விவசாயிகள், மற்றும் மாணவர்கள் என தமிழர் வாழ்க்கை, இயற்கை மற்றும் படைப்பாற்றல் குறித்து ஆர்வமுள்ள அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். நிகழ்வைப் பார்க்க வந்தாலும், விளையாட்டு, திணை தோசையை ருசிக்கவோ அல்லது பாரம்பரிய இசையை ரசிக்க வந்தாலும் நீங்களும் சமூக முன்னேற்றத்தில் அங்கமாகிறீர்கள்.
இணையதளம்: www.sempozhil.org
தொடர்பு: [email protected] +91 98409 04244
சமூகவலைதளம்: @sempozhil
சென்னையின் மையப்பகுதியில் உருவாக இருக்கும் நம் பாரம்பரிய கிராமத்தில் வாழ வாருங்கள்!