spot_img
HomeNewsபெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்

பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்

 

சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக வீடியோ ஆல்பம் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது.

ஆல்பம் பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடல்களாகவும் தான் வெளிவரும். ஆனால் ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் இதிலிருந்து தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் நினைத்தால், அவள் மனதால் விருப்பப்பட்டால் அதை அவளுக்கும், அவளை சார்ந்தவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான வாழ்வாக மாற்றி அமைக்க முடியும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்.. ஒட்டுமொத்த பெண்களின் இரண்டு விதமான வாழ்க்கை முறையை இதில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தங்களை அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அழகாக மாற்றும் சக்தி பெண்ணுக்கும் பட்டாம்பூச்சிக்கும் உண்டு என்பதை மையப்படுத்தி தான் இந்த ஆல்பத்திற்கு ‘பட்டர்ஃபிளை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

காந்தாரா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் பாடலில் சாந்தினி மற்றும் ஷ்ரதா ராவ், ஷ்ரதா ராவின் கணவராக பிக்பாஸ் புகழ் விஷ்ணு ஆகியோர் மிக சிறப்பாக நேர்த்தியாக நடித்துள்ளனர்..

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் மதியழகன் நடித்துள்ளார். அவருக்கு நடிகர் பார்த்திபன் பின்னணி குரல் கொடுத்துள்ளது இந்த பாடலுக்கு பெரும்பலமாக அமைந்துள்ளது.

இந்த பாடலை கவிஞர் மணி எழுத அச்சுராஜா மணி இசையமைத்துள்ளார். அச்சுராஜா மணி மற்றும் அமலா இணைந்து ஒந்த பாடலை பாடியுள்ளனர். ஒரு சின்ன பாடலுக்குள் வித்தியாசமான காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிராங்கிளின் ரிச்சர்ட். சாமானியன் திரைப்படத்தின் கதாசிரியர் வி. கார்த்திக் குமார் பாடலின் கருவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பாடலை சிறப்பாக இயக்கியுள்ளார்.

நாளை (ஆக=26) பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு இந்த பட்டர்ஃபிளை ஆல்பம் ETCETERA ENTERTAINMENT YOUTUBE சேனலில் வெளியிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img