புதுமுகங்களின் வரவு தமிழ் திரையில் தற்போது மிகுந்து வருகிறது அந்த வகையில் புது முகங்கள் புது முகங்களாக அல்லாமல் நம்மை கட்டிப்போட்டு வைத்த படம் கடுக்கா படம் என்ன சொல்ல வருகிறது..
குமாரபாளையம் கிராமத்தில் நாயகன் காலையில் எழுந்தவுடன் டிப் டாப்பாக உடை அணிந்து பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பார். ஆனால் பஸ்ஸில் ஏற மாட்டார். காரணம் சைட் அடித்து காதலிக்க பெண் தேடும் படலமாம். பிறகு வெட்டி அரட்டை, தாயக்கட்டை இதுதான் பொழுதுபோக்கு.
இந்த நிலையில் அவர் வீட்டு அருகில் கல்லூரி செல்லும் கதாநாயகி குடி வருகிறார். அவருக்கு காதல் வலை வீசுகிறார் நாயகன். வலையில் மீன் சிக்குகிறது. சந்தோஷத்தில் மிதக்கிறார் நாயகன். இந்த நிலையில் வேலைக்காக திருப்பூர் செல்லும் நாயகன் அவன் நண்பனிடம் பேச்சுவாக்கில் பக்கத்து வீட்டு காதலை சொல்ல, அந்தப் பெண்ணை தான் காதலிப்பதாக நாயகனின் நண்பன் சொல்ல கதையின் ஓட்டம் விறுவிறுப்பாகிறது.
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரையும் காதலிக்கும் நாயகி காரணம் என்ன ? காதலை அறிந்த நாயகியின் பெற்றோர் நாயகிக்கு மணமுடிக்க முடிவெடுக்க மணநாளில் நாயகி காணாமல் போகிறார். பிறகு என்ன நடக்கிறது ? இதுவே கடுக்கா படத்தின் கதைச்சாரம்.
நாயகன் அறிமுகம். ஆனால் நடிப்பில் தேர்ச்சி. காதல், சோகம், நகைச்சுவை, கோபம் என பல பரிமாணங்களை நம் முன் கொண்டு வந்து காட்டுகிறார். அனைத்தும் சிறப்பு பஸ்டாண்டில் சைட் அடிப்பதில் இருந்து சரி, பக்கத்து வீட்டுப் பெண்ணின் தாயார் தன் தாயாரிடம் சண்டை போடும் போதும் சரி தன் சமாளிப்பை சிறப்பாக சமாளிக்கிறார். நாயகியிடம் காதல் ரசம் நண்பனிடம் வன்மம் என தன் நடிப்பாற்றலை சிறப்பாக செய்திருக்கிறார்.
நண்பனாக வருபவரும் சரி ஒரு எதார்த்த நாயகனாக சிறப்பாக தன் பங்களிப்பை அருமையாக செய்திருக்கிறார். நாயகி இருவரையும் ஏன் காதலிக்கிறார் என்பது இறுதிக் காட்சியில் தெரியவரும் போது அவர் செய்தது சரிதான் என்பது நமக்குத் தெரிய வருகிறது.
நாயகியின் தந்தையாக வருபவர் கோயம்புத்தூர் குசும்பு முழுவதையும் தன்னில் வைத்து வசனங்களை நம்மை சிரிக்க வைக்கிறார்.. பாராட்டுக்கள். கடுக்கா என்றால் என்ன ? மற்றவர்களுக்கு தெரியாமல் மற்றவர்களை ஏமாற்றுவது இதுதான் கடுக்கா. படத்திற்கு இந்த தலைப்பு மிக அருமை.
படத்தின் ஆரம்பத்தில் கொஞ்சம் நாம் கதையை உள்வாங்கும்போது அதற்குள் நாம் சென்று விடுகிறோம். மிக அருமையாக எந்த ஒரு தொய்வும் இல்லாமல் திரைக்கதையை, தெளிவாக வசனங்களை கோயம்புத்துர் குசும்பாக எழுதி இயக்கத்தை அழகாக செய்து இருக்கிறார் இயக்குர்.
மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் நமக்கு ஏமாற்றங்கள் அளித்தாலும் சிறிய முதலீட்டில் வந்திருக்கும் இந்த கடுக்கா நம்மை எந்த விதத்திலும் நோகடிக்காமல் ஒரு ரசிகனுக்கு என்ன தேவையோ அதை ரசிக்கும் படியாக செய்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.
கடுக்கா ;- காதல் என்பது ஒரு கானல் நீர்
ரேட்டிங் 3/5