கதை:
கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளரும் புரட்சித் தலைவருமான பி. கிருஷ்ண பிள்ளையின் (1940–46) வீர வாழ்க்கை வரலாறே படத்தின் மையம். விவசாயிகளின் துன்பங்கள், சாதி–பணக்கார வேறுபாடுகள், நிலச்சுவான்தார்களின் அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக கம்யூனிசம் எவ்வாறு எழுச்சி பெற்றது என்பதை உண்மையுடன் காட்டுகிறது..
நடிப்பு:
சமுத்திரக்கனி – பி. கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் தீவிரமும் உணர்வும் கலந்த நடிப்பு.
பரத் – செல்வந்த கம்யூனிசவாதியாக சிறப்பாக நடித்துள்ளார்.
சுரபி லட்சுமி, பி.கே. மேதினி, ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி ஆகியோர் தங்கள் வேடங்களில் நன்றாகப் பொருந்தியுள்ளனர்..
தொழில்நுட்பம்:
ஒளிப்பதிவு: பெரும் பிரமாண்டம் இல்லாவிட்டாலும், கிராமிய சூழலும் உணர்ச்சிகளும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இசை:
எம்.கே. அர்ஜுனன், ஜி. ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோரின் இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது.
இயக்கம்:
இயக்குனர் அனில் வி. நாகேந்திரன், வரலாற்று உண்மையை மீறாமல், உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். “போராட்டமே மாற்றத்தின் வழி” என்ற கருத்தை வலிமையாகக் கூறுகிறார்.
முடிவுரை :
வீரவணக்கம் – பிரமாண்ட காட்சிகள் இல்லாதபோதும், வரலாறையும் புரட்சியையும் உண்மையுடன் சித்தரிக்கும் படம். சமுத்திரக்கனியின் தீவிர நடிப்பு, அனிலின் நேர்மையான இயக்கம், சமூக நீதி–சாதி எதிர்ப்பு–பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை வலுவாக வெளிப்படுத்துகிறது