spot_img
HomeNewsசென்னையில் நடைபெறும் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளையை அறிமுகப்படுத்துகிறது!

சென்னையில் நடைபெறும் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளையை அறிமுகப்படுத்துகிறது!

 

விளையாட்டு மற்றும் சினிமாவின் தனித்துவ கொண்டாட்டமான RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் செப்டெம்பர் 3 மற்றும் 4 அன்று சென்னை, தி.நகரில் உள்ள AGS சினிமாஸில் அறிமுகமாகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பிளாக்பஸ்டர் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை இரண்டு நாட்களுக்கு பெரிய திரையில் பார்த்து கொண்டாடலாம்.

காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகள் முதல் சமீபத்திய வெற்றிகள் வரை ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை கொடுக்க இருக்கிறது. விளையாட்டு நமக்கு எப்படி ஊக்கமளிக்கிறது, உந்துதல் கொடுக்கிறது மற்றும் மைதானத்திற்கும் அப்பாற்பட்டு நம் வாழ்வில் எப்படி முக்கியமான அங்கம் வகிக்கிறது ஆகியவற்றை ஒவ்வொரு திரையிடலும் நமக்கு உணர்த்தும். விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், திரைப்படத்துறையினர் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி விளையாட்டின் மீதான தங்கள் ஆர்வத்தைக் கொண்டாட இருக்கிறார்கள்.

நிகழ்வு குறித்து ஸ்போர்ட்ஸ் கியூரேட்டர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் RUC லீடர்ஷிப்பின் அங்கமாக இருக்கும் வீரா கூறியது, “சினிமா மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டும் சந்திக்கும் நிகழ்வு என்பதால் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் பொழுதுபோக்கையும் தாண்டியது. போட்டிகள் மட்டுமல்லாது அதற்கு பின்னால் இருக்கும் தனிப்பட்ட பயணத்தையும் எடுத்து சொல்லும் விதமாக படங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறோம். விளையாட்டு வீரர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு திரைக்கு அப்பால் உரையாடலை உருவாக்கும் விதமாகவும், சென்னை மீதான அன்பை அதிகரிக்கும் விதமாகவும் இந்த நிகழ்வு இருக்கும்” என்றார் மகிழ்வுடன்.

ரைஸ் அப் சாம்பியன்ஷிப் (RUC) அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ தொடக்கமும் RCU ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் நிகழ இருக்கிறது. கலாச்சாரம், பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கை முறையுடன் வடிவமைக்கப்பட்டது இந்த தளம்.

வளர்ந்து வரும் மற்றும் தொழில்முறை விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரர்களின் திறமையைக் கண்டறிந்து வளர்க்கவும், நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் விளையாட்டை ஒருங்கிணைப்பது இதன் நோக்கமாகும். போட்டிகளை நடத்துவது மட்டுமல்லாமல், வாய்ப்புகளை உருவாக்குவது, புதிய திறமைகளுக்கான கதவுகளைத் திறப்பது மற்றும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அமைப்புகளுடன் இணைப்பது இதன் குறிக்கோள்.

அறக்கட்டளையின் தொடக்கத்தைப் பற்றி RUC நிறுவனர் மற்றும் சீரியல் தொழில்முனைவோர் செல்வகுமார் பாலு பேசியது, “காலங்காலமாக விளையாட்டிற்கு என நாம் வகுத்து வைத்திருக்கும் எல்லைகளை மறுவரையறை செய்வதற்காக ரைஸ் அப் சாம்பியன்ஷிப் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. தொழில்முறை விளையாட்டு வீரர்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள திறமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் விரும்புகிறோம். விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார உலகங்களை இணைப்பதன் மூலம் விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் மற்றும் பிராண்டுகள் என அனைத்தும் ஒன்றாக வளரும் இடமாகவும் இது இருக்கும்” என்றார்.

அறக்கட்டளையின் தொடக்கத்தை அடுத்து செப்டம்பர் 26, 27 மற்றும் 28, 2025 ஆகிய தேதிகளில் மற்றொரு முக்கிய நிகழ்வான RUC பிக்கிள்பால் பை தி பே (#PBTB2025) சென்னையில் நடைபெறும். இந்திய பிக்கிள்பால் சங்கத்துடன் இணைந்து PWR 1000 போட்டியாக இது இருக்கும். இதன் மூலம் இந்தியா இதற்கு முன் பார்த்திராத அளவில் பிக்கிள்பாலை அறிமுகப்படுத்துகிறது. இந்த போட்டியில் 25,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்வும் நடத்தப்படுகிறது.

ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் இந்தப் போட்டி இடம்பெறும். ஒவ்வொன்றிலும் 32 எண்ட்ரி இருக்கும். போட்டிகள் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படும். வலுவான டிஜிட்டல் கவரேஜ் மற்றும் இன்ஃபுளூயன்சர் பார்னர்ஷிப்போடு இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச அளவிலான பிக்கிள்பால் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img