தருண் விஜய் தயாரித்து நடித்திருக்கும் படம் குற்றம் புதிது. அப்படி குற்றம் புதிது படம் என்ன சொல்ல வருகிறது ? பைக்கில் உணவு பொருட்களை ஆர்டர் செய்யும் நாயகன். உதவி கமிஷனர் மகள் இரவில் காணாமல் போக அதைத் தேடும் படலம்.. சந்தேக வட்டத்தில் நாயகன்.. ஆனால் அவன் குற்றவாளி இல்லை.. ஒரு ஆட்டோ டிரைவர் தான் குற்றவாளி என்று தெரிய வருகிறது.
இந்நிலையில் நாயகன் நான் தான் அந்த பெண்ணை கொலை செய்தேன். அது மட்டுமல்ல.. இன்னும் இரண்டு கொலைகள் செய்திருக்கிறேன். என் பள்ளி ஆசிரியை, என் காலேஜ் நண்பன் என்று சொல்ல போலீஸ் அதிர்ச்சியில் உறைகிறது. ஆனால் இவன் கூறிய பள்ளி ஆசிரியை மற்றும் நண்பன் உயிரோடுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் உதவி கமிஷனர் மகள் விரல் மட்டும் வெட்டப்பட்டு மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறாள். அப்படி என்றால் எதற்காக நாயகன் இப்படி கூற வேண்டும். விடை காண பாருங்கள். குற்றம் புதிது..
அறிமுக நாயகன் தருண் விஜய் மிக அழகாகவும் தமிழ் சினிமாவுக்கு ஏற்ற கதாநாயகனுக்கு உள்ள அனைத்து அந்தஸ்துகளும் உடைய நாயகனாக நமக்கு தெரிகிறார். நடிப்பிலும் சரி புதிது போல் இல்லை. ஒரு இன்னசென்ட் போல் அவர் சொல்லும் கதைகளில் ஒரு எதார்த்தமான ஒரு பாமர மனிதனை கொண்டு வருகிறார். அதுவும் நானே கொலை செய்தேன் என்று கூறும் காட்சி.. ஒரு சைக்கோவாக நம் முன் தெரிகிறார். நாயகி, இவரின் இறுதிக்காட்சி நமக்கு நெஞ்சை படபடக்க வைக்கிறது..
இயக்குனர் திரைக்கதையில் ஒரு எதிர்பார்ப்புடன் காட்சிகளை நகர்த்தி, பார்க்கும் ரசிகனை உற்சாகப்பட வைக்கிறார். கேமரா தன் பணியை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறது. இசை காட்சிக்கு ஏற்றார்போல் அழகாக அமைத்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்கள் கதாபாத்திரம் அறிந்து மிகைப்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.
குற்றம் புதிது – புதியவர்களின் புதிய பரிமாணம்