spot_img
HomeCinema Reviewலோகா சாப்டர் 1 ; சந்திரா - விமர்சனம்

லோகா சாப்டர் 1 ; சந்திரா – விமர்சனம்

 

வெளிநாட்டில் இருந்து கேரளா வரும் சந்திர தனியாக வீடு எடுத்து தங்குகிறார்..  அவரது எதிர் பிளாட்டில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர் நஸ்லேன், சந்திராவை பார்த்ததும் காதலில் விழுகிறார்.. இந்த சமயத்தில் நகரத்தில் அவ்வப்போது மனித உறுப்புகளுக்காக பலர் கடத்தப்படுகின்றனர்.. அதில் தொடர்புடைய ஒருவனை பெண் விஷயம் ஒன்றில் அடித்து காயப்படுத்துகிறார் சந்திரா. அதனால் சந்திராவை கடத்தி கொலை செய்ய முற்படும் போது சந்திரா அவர்கள் அனைவரையும் கொலை செய்து விடுகிறார். இதை பார்த்த எதிர் வீட்டு காதலன் மயக்கம் அடைய அவனின் துணையோடு பிணமான அனைவரையும் எரித்து சாம்பல் ஆக்குகிறார் சந்திரா போலீஸ் சந்திராவையும் அவன் எதிர் வீட்டு காதலனையும் தீவிரவாதி என்று தேட சந்திர யார் என்று தெரிய வருகிறது. யார் அந்த சந்திரா ? விடை காண பாருங்கள் படத்தை..

சுப்பர் ஹீரோ சந்திரா கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்களிடம் தன்னுடைய அசத்தலான கண் அசைவாலும் …அளவான உச்சரிப்பாலும்… நேர்த்தியான உடல் மொழியாலும்…எளிதாக கடத்துகிறார்.

சன்னி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பிரேமலு’ புகழ் நாயகன் நஸ்லன் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இவருடைய நண்பர்களாக வரும் நடிகர் சந்து சலீம் குமார் ரசிகர்களை எளிதில் கவர்கிறார்.

நாச்சியப்ப கவுடா என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டர் அற்புதமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை நடிப்பால் மிரட்டுகிறார்

சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும் திரையில் தோன்றாத பெரியவர் கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் திரைக்கதையில் கையாளப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கோணங்கள் மற்றும் வண்ணங்கள் படத்தை பிரமாண்டமானதாக மட்டும் இன்றி தரமானதாகவும் கொடுத்திருக்கிறது.

யட்சி  என்று  அழைக்கபடும்  நாயகி அதீத சக்தி படைத்தவள். நாம் பார்த்து ரசித்த ஜாம்பி எனும் திரைப்படம் நமக்கு ஞாபகம் இருக்கும். ஜாம்பியாக இருப்பவர்கள் கடித்தால் அவர்களும் ஜாம்பியாகி விடுவார்கள். அது போல் தான் இதிலும். ஆனால் கடிபட்டவர்கள் உடல் பலம் இருந்தால் மட்டுமே அந்த சக்தி அவர்களுக்கு கிடைக்கும். இவர்களுக்கு வெயில் மற்றும் இதயம் இது மட்டுமே உயிர் போக காரணமாக இருக்கும். மற்றபடி இவர்களை சாகடிப்பது கடினம். ஆனால் படம் முழுவதும் ஆக்சன் திரில்லர் என பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசித்துப் பார்க்கலாம்.

லோகா சாப்டர் 1 ; சந்திரா – நிஜமல்ல கதை

ரேட்டிங்-3/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img