‘ரீட் கிதாப்’ (Read Kitaab) கம்யூனிட்டியில் கிட்டத்தட்ட 23,000-க்கும் அதிகமான வாசகர்கள் உள்ளனர். இதன் இணை நிறுவனர் ஏக்தா பந்தாரியுடன் வாசகர்கள் முன்னிலையில் எழுத்தாளர் அமிஷ் உரையாடல் நிகழ்த்தினார்.
அதில் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமிஷ் கூறிய பதிலாவது, “1300 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த கதையில் தோல்வியை பற்றி மட்டும் அல்லாது பல வெற்றிக்கதைகளையும் சொல்லி இருக்கிறோம். நம் முன்னோர்கள் ஒருபோதும் சரண் அடைந்தது இல்லை. தொடர்ந்து போரிட்டிருக்கிறார்கள். அதுவே நம் கதை, நம் வரலாறு!” என்றார்.
2020 ஆம் ஆண்டு விற்பனையில் சாதனை படைத்து, வாசகர்களிடம் அதிக பாராட்டுகள் பெற்ற புத்தகமான ‘லெஜண்ட் ஆஃப் சுஹெல்தேவ்’ புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தி சோழா டைகர்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. ஹார்பர்காலின்ஸ் இந்தியாவால் வெளியிடப்பட்ட இந்த சிலிர்ப்பூட்டும் வரலாற்றுக் கதை, எதிர்ப்பு, மரியாதை மற்றும் வெற்றி ஆகிய உணர்வுகளைக் கொண்டாடுகிறது. பரபரப்பும் ஆக்ஷனும் மிகுந்த ‘தி சோழா டைகர்ஸ்’, தர்மத்தையும் உங்கள் நாட்டின் கௌரவத்தையும் பாதுகாக்க நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்ற ஆழமான கேள்வியை வாசகர்கள் முன் வைக்கிறது.
எழுத்தாளர் அமிஷ் கையொப்பமிட்ட புத்தகத்தின் நகல்களை அடையாறில் உள்ள ஒடிஸியில் இருந்து வாசகர்கள் பெறலாம். மேலும், அமிஷின் முந்தைய புத்தகங்களையும் இங்கு வாங்கலாம்.
வீட்டில் நேரடி டெலிவரிக்கு 96006 38831 என்ற எண்ணில் அழைக்கவும்.