சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜுமேனன், வித்யுத் ஜாம்வால், விக்ராந்த் மற்றும் பலர் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “மதராஸி”. படம் என்ன சொல்ல வருகிறது ?
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவ செய்வதற்காக தீவிரவாத கூட்டம் பல கண்டெய்னர்களில் துப்பாக்கியை சென்னைக்கு கொண்டு வர அதை தடுக்க நினைக்கும் புலனாய்வுத் துறையை அடித்து நொறுக்கி கண்டெய்னர்களை பதுக்கி வைக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க ஒரு விபத்தில் தன் குடும்பத்தை இழந்த நாயகன் யாராவது விபத்தில் சிக்கினால் அவர்கள் தம் குடும்பத்தில் உள்ளவர்கள் என நினைத்து அவர்களுக்கு உதவி செய்கிறார். இது ஒரு வித்தியாசமான மனநோய். இதனாலேயே அவரை காதலிக்கிறார் நாயகி
ஆனால் காதலில் திடீர் தடை ஏற்பட, தற்கொலைக்கு முற்படும் நாயகன் தோல்வி அடைய பிஜுமேனன் பார்வையில் அவர் பட, அவரை வைத்து தீவிரவாத கும்பலை பிடிக்க திட்டம் தீட்டுகிறார். இறுதியில் என்ன ஆகிறது. ? இதுவே மதராஸியின் கதைக்களம்.
சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் அதிக பொருட்செலவில் வந்திருக்கும் படம் மதராஸி. அதேபோல் ஏ.ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணி புதியது என்றாலும் ரசிகனை ஏமாற்றாமல் திரைக்கதையை திரைக்கதையை விறுவிறுப்பாக்கி ரசிகனை விசில் அடிக்க செய்கிறார்.
தன் ரசிக கூட்டத்தை ஏமாற்றாமல் சிவகார்த்திகேயனின் நடிப்பு சிறப்பு. ஆரம்பக் காட்சியில் அம்மாஞ்சியாக வந்தாலும் படம் நகர நகர அடிதடியில் அசத்துகிறார் சிவகார்த்திகேயன்.
மாஸ் ஹீரோ வரிசையில் அடுத்து இடம் பிடிக்க போவது சிவகார்த்திகேயன் என்பது உறுதியாகிவிட்டது. சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கும் அடிதடி, ஆக்ரோஷம் என பலவித பரிமாணங்களை ரசிகனுக்கு பரிசளித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நாயகி டென்டல் காலேஜ் ஸ்டுடென்ட். நாயகனை காதலிக்க அவரின் மனிதநேயம் மட்டுமே காரணம். ஆனால் அந்த மனித நேயம் தன் காதலால் பாதிக்கப்படுவதால் காதலை துறக்கிறார். இருந்தாலும் நாயகன் தற்கொலை எண்ணத்தை மாற்ற மீண்டும் இணைகிறார். நாயகியின் காதலே நாயகனின் ஆக்ரோஷம் அன்பு மனிதநேயம் மற்றும் தேசப்பற்றுக்கு காரணம் ஆகிறது
தமிழ் சினிமாவில் வெகு நாட்களுக்குப் பிறகு கதாநாயகிக்கு ஒரு சிறந்த கதாபாத்திரம் அமைந்திருப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
புலனாய்வுத்துறை அதிகாரியாக பிஜுமேனன். அது என்னவோ தெரியவில்லை அந்த கதாபாத்திரத்துக்காக அவர் பிறந்த மாதிரி இருக்கிறது. தன் மகனை இழந்த சோகத்தை கூட முக பாவனையில் மிரட்டுகிறார். அசத்தல்.
வில்லனாக வித்யுத் ஜாம்வால்.ஏக பொருத்தம். விக்ராந்த் மற்றும் நடிகர்களும் தங்கள் கதாபாத்திரம் அறிந்து சிறப்பு செய்திருக்கின்றனர்.
ஏ.ஆர் முருகதாஸ் என்றால் பிரம்மாண்டம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஓப்பனிங் காட்சியில் டோல்கேட் பைட் அட அட.. ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கிறது.
அதற்கேற்ற போல் இசையும் அசத்தல். சிவகார்த்திகேயனின் ஓப்பனிங் சாங் அவரின் ரசிகரை தியேட்டரில் ஆட வைக்கும்.
அரசியலுக்கு செல்லும் விஜய்யின் இடத்தை பிடிக்க வருகிறார் சிவகார்த்திகேயன்
மதராஸி – துப்பாக்கி-2
ரேட்டிங்-4 / 5