spot_img
HomeNewsயூகி விமர்சனம்

யூகி விமர்சனம்

நரேன் கதிர் கயல் ஆனந்தி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் யூகி

]பிரதாப் போத்தன் ரிட்டையர்டு போலீஸ் ஆபீஸர் தன் மகளை காணவில்லை என்று ஒரு பிரைவேட் டிடெக்டிவிடும் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைக்க உதவிக்கு சஸ்பெண்டில் இருக்கும் எஸ் ஐ அனுப்பி வைக்கிறார் டிடெக்டிவ் ஆபிஸர் நரேன் பெண்ணை தேடும் முயற்சியில் பல திடுக்கிடும் சம்பவங்கள வெளிவருகிறது நரேன் காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்தாரா என்பதே மீதி கதை

படம் ஒரு சஸ்பெண்ட் திரில்லராக ஆரம்பித்து அந்த வேகம் சிறிதும் குறையாமல் எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்

டிடெக்டிவ் ஆபீஸ் ஆக நரேன் நடிப்பு அசத்தல்

நோயாளி மனைவிக்கு கணவனாக கதிர் நடிப்பு கண்கலங்க வைக்கும் ஆனால் படத்தின் இறுதி காட்சியில் கதிர் உடைக்கும் உண்மைகள் நம்மை இருக்கையின் நுனிக்கு இழுத்துச் செல்கிறது

சினிமா நடிகராக ஜான் விஜய் பிக் தலையுடன் முட்ட கண்ணை உருட்டி உருட்டி அவர் கதை கேட்கும் விதம் அவருக்கு உரித்தான சாயல்

அவரை கொல்வது யார் என்ற கேள்வி குறியுடன் படம் ஆரம்பிக்க சில பல காட்சிகள் காலகட்டங்களில் மாறுபட்டு நமக்கு காட்டப்பட்டு அதை நாம் யூகிப்பதற்கு அடுத்த காட்சி வந்துவிடுகிறது

பலவித சஸ்பென்சுடன் படம் நகர்ந்து செல்லும் போது நான் சிறிது கவனம் சிதைவு ஏற்பட்டு படத்தை கவனிக்க தவறி விட்டாள் கதையின் போக்கு நமக்கு புரியாது

கர்ப்பிணி பெண்ணாக கயல் ஆனந்தி இவர் அறிமுகமே ஒரு அதிர்ச்சியில் ஆரம்பிக்கிறது இவர் கதாபாத்திரமும் அதிர்ச்சியில் முடிகிறது பிரதாப் போத்தன் தன் மகனுக்காக செய்யும் செயல் அவரை கைது வரை எடுத்து செல்கிறது யூகி கிரைம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

Must Read

spot_img